Home » , , , » சிவராத்திரியை முன்னிட்டு பண்டார வன்னியன் நாடகம்- பொலிஸார் அனுமதி

சிவராத்திரியை முன்னிட்டு பண்டார வன்னியன் நாடகம்- பொலிஸார் அனுமதி

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 4:28 PM

இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் மேடையேற்ற இருந்த பண்டார வன்னியன் நாடகத்தை பொலிஸ் கண்காணிப்புடன் நடத்துவதற்கு ஊர்காவற்துறைப் பொலிஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.


305591_332839430109110_100001491672993_905279_1317357176_n


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் பேசியதற்கமைய, அந்தப் பிரதேச மக்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய பொலிஸார், இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக விந்தன் கனகரட்னம் தெரிவித்துள்ளார்.


மகா சிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவ்ற்துறை தம்பாட்டி முத்துமாரியம்மன் பிரதேசத்தில் பண்ணடார வன்னியன் நாடகம் அரங்கேற்றப்பட இருந்தது. இதற்காக கலைஞர்கள் பழகிக்கொண்டிருந்த வேளையில் அங்கு சென்ற பொலிஸார், இந்த நாடகத்தை நடாத்தக் கூடாதென அச்சுறுத்தி நாடகக் கொப்பியையும் பறித்துச் சென்றனர். அதாவது, இந்த நாடகம் அரசிற்கு எதிரானதும், புலிகள் சார்பானதுமெனக் கூறியே பொலிஸார் நாடகத்தை நடத்தக் கூறாதெனத் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக அப்பகுதி மக்கள்ள கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் என்ற ரீதயில் விந்தன் கனகரட்னத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து ஊர்காவற்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் வந்தன் கனகரட்னம் பேசியிருந்தடிhர்.


இதனைத் தொடர்ந்து அந்தப் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பொலிஸார் பேசியிருந்தனர். அதாவது, இந்த நாடகம் பயங்கரவாதத்தை தூண்டுவதாக அமைவதாகவும், அவ்வாறே தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் இதனாலேயே தடை செய்ததாகவும் தெரிவித்தனர்.


ஆயினும் அவ்வாறு இந்த நாடகம் அமையவில்லை என்றும், காலங் காலமாக இந்த நாடகம் நடைபெற்று வருவதாகவும், இந்த நாடகம் தமிழர் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையிலையே அமையுமென்று பொலிஸாருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.


இதனையடுத்து நாடகத்தை நடத்துவதற்கு அனுமதியளித்துள்ள பொலிஸார், அந்த நாடகம் முழுவதையும் ஒளிப்பதிவு செய்து கொள்ளப் பேவதாகவும் தெரிவித்தனர். இதற்கமைய பொலிஸ் கண்காணிப்புடன் இன்றையததினம் பண்டாரவன்னியன் நாடகம் மேடையேற்றப்பட உள்ளதாகவும் விந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger