Powered by Blogger.
Latest Post
Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

அஜித் மோதக் காத்திருக்கும் வில்லி

Written By Namnilam on Sunday, August 31, 2014 | 11:09 AM

கௌதம் மேனன் இயக்கத்தில் முதல்முறையாக நடித்துவரும் அந்தப் படத்தைத் தொடர்ந்து 'வீரம்' பட இயக்குநர் சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து கோட், சூட், பைக் சேஸிங், துப்பாக்கி என வலம் வந்து கொண்டிருந்த அஜித்தை 'வீரம்' படத்தில் வேட்டி, சட்டை, அரிவாள், மாட்டு வண்டி என ஒட்டுமொத்தமாக மாற்றிக் காட்டி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார். 

இதனால் இவரின் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டுள்ள சிவா, "அஜித் படத்திற்கான கதையை நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒன்றை மட்டும் என்னால் இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். 

இதுவரை தமிழ் சினிமாவிலேயே யாரும் தொடாத ஒரு கதைக் களத்தை அஜித்திற்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்!" என்று கூறியிருக்கிறார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் ஏற்படாத நிலையில், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனை கதாநாயகி பாத்திரத்தில் பொருத்துவது குறித்து அஜித்துடன் ஆலோசித்து வருகிறாராம் சிவா. படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வந்ததுபோன்ற ஒரு கதாபாத்திரதுக்கு ஸ்ருதிஹாசன் சரியாக இருப்பார் என்பது சிவாவின் எதிர்பார்ப்பு. அஜித் பேசிப்பாருங்கள் என்று மட்டும் அனுமதி கொடுத்திருப்பதாகத் தகவல். 

கையும் களவுமாக திருட்டு வீடியோவைப் பிடித்தார் பார்த்திபன்

Written By Namnilam on Saturday, August 30, 2014 | 10:38 PM

தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பார்த்திபன், மிகுந்த சிரத்தைக்குப் பிறகு இயக்கிய 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியாகி வெற்றிபெற்றிருக்கிறது. 

இந்தத் திரைப்படத்தின் திருட்டு வீடியோக்களை ஒழிக்கும் விதத்தில், சென்னை பர்மா பஜாரில் ஒரு கடையில், இயக்குநர் பார்த்திபன் தானே நேரில் சென்று கையும் களவுமாக ஒருவரை பிடித்துள்ளார். 

பார்த்திபனின் உதவியாளர் ஒருவர் கடையில் நிற்க, தூரத்தில் கேமராவுடன் இருக்கும் பார்த்திபன், உதவியாளருடன் செல்பேசியில் பேசுகிறார். சிடி வாங்குவதற்காக ஒருவர் வந்து, காசு கொடுத்து, அவருக்கு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தின் திருட்டு விசிடி கைமாறும் போது, பார்த்திபன் தானே காரிலிருந்து இறங்கி, அந்தக் கடைக்குச் சென்று, சிடி விற்பவரை கையும் களவுமாக பிடிக்கிறார். 

மேலும், அந்தக் கடையில் சமீபத்தில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் சி.டிக்களும் கிடைக்கும் என்பதையும் பார்த்திபன் தெரிந்து கொள்கிறார். பார்த்திபனைக் கண்டதும் கூட்டம் சேர, தனக்குத் தெரிந்த அதிகாரியையோ நண்பரையோ போனில் அழைத்து அங்கு நேரில் வருமாறு அவர் கேட்கிறார். 

அண்மையில் நடந்த தனது திரைப்படத்தின் வெற்றிவிழாவில், பார்த்திபன் 'கதை, திரைக்கதை, வசனம், இயக்க'ம் படத்தின் டி.விடியை பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துக் காண்பித்து வருத்ததோடு பேசினார். சமீபத்தில் தான் நடிகர் விஷால் இதேபோல் கேபிள் டிவியில் புதுப் படங்களை ஒளிபரப்பிய கேபிள் டிவி ஆப்பரேட்டரை கையும் களவுமாக பிடித்த வீடியோ 'மலரும்' வாசர்களுக்கு நினைவில் இருக்கலாம்.

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதை தொடர்ந்து 'சிலம்பாட்டம்', 'ஆடுகளம்', 'மூடர்கூடம்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன். 

ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன், இந்த மாதம் 31ஆம் திகதி திருமணம் செய்துகொள்கிறார். 

வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள். 

இன்று ரிச்சர்ட் அட்டன்பரோவின் 91ஆவது பிறந்த தினம்! ஹொலிவூட்டின் முதுபெரும் டைனோசர்

உலக சினிமாவின் மாபெரும் மனிதன் மறைந்து விட்டார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் கூறினார். அவருடைய காந்தி படத்தைப் பார்த்த பின் நான் காந்தியைப் பற்றி ஏராளமாக அறிந்து கொண்டேன் என்று இந்திய திரைப்பட நடிகர்கள் வெளிப்படையாக கூறினர். 

டிக்கி என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபர், என்று மனித வாழ்க்கையில் பல அவதாரங்கள் எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோ தனது 90ஆவது வயதில் கடந்த வாரம் லண்டனில் காலமானார். அவர் ஏராளமான ஹொலிவூட் படங்களில் நடித்துள்ளார். கணிசமான எண்ணிக்கையில் பல திரைப்படங்களை அவர் இயக்கியும், தயாரித்தும் உள்ளார். அவர் யுனிசெவ் அமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும் பல மனிதநேய அமைப்புகளின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். 

துடிப்புமிக்க ஆனால் சிறிய உருவம் கொண்ட, வட்ட முகமுடைய அவர் முகத்தில் குழந்தைத்தனம் என்றும் நிலைத்திருந்தது. நரைத்த வெள்ளைத்தலையுடன் அவர் இருந்த போதும் கூட அவருடைய முகத்தில் குழந்தைத்தனம் கலையவில்லை. அதற்கேற்றாற்போல் அவர் நடித்த முதல் ஆங்கில யுத்த படங்களில் இளம் கடற்படை வீரராகவோ, விமானப்படை வீரராகவோ நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

அவர் 1942ஆம் ஆண்டில் திரைப்படத்தில் அறிமுகமானார். "இன் விச் வீ சர்வ்" என்ற யுத்தகால திரைப்படத்தில் 19வயதான பயந்து நடுங்கும் மாலும் வேடத்தில் அவர் நடித்தார். அதுவொரு சிறிய பாகம் ஆனாலும், அவர் ஏற்று நடித்த பாத்திரம் ஒரு மறக்க முடியாததாகும். அந்த படம் சிறந்த படத்துக்கான ஒஸ்கார் விருதைப் பெற்றது. 1947ஆம் ஆண்டில் ஒரு பதின்மபருவ ரௌடி பிங்கியாக அவர் நடித்த "பிரைட்டன் ராக்" திரைப்படத்தில் அவருடைய முகமும், அதன் குறும்புத்தனமும் அவரை ஒரு மறக்க முடியாத பாத்திரமாக்கிவிட்டது. 

பிரபல ஆங்கில நாவலாசிரியை அகதா கிறிஸ்டி தன்னுடைய "தி மௌஸ்டிராப்" நாவல் மேடையேறிய போது இவர் அதில் வரும் இளம் துப்பறிவாளர் வேடத்துக்கு பொருந்தமாட்டார் என்று கூறினார். ஆனால் 1952 நவம்பரில் அந்த நாடகம் மேடையேறிய போது அட்டன்பரோவும் அவருடைய மனைவி ஷீலா சிம்மும் இணைந்து நடித்தனர். அது தொடர்ந்து 700 தடவை மேடையேறி சரித்திரம் படைத்தது. ரிச்சர்ட் சாமுவேல் அட்டன்பரோ கேம்பிரிட்ஜில் பிரடரிக் லெவி அட்டன்பரோ - மேரி அட்டன்பரோ தம்பதியருக்கு மூத்த மகனாக 29.8.1923ஆம் ஆண்டில் அவதரித்தார். அவர் ஆங்கிலோ - சாக்சன் சட்டத்தில் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இவர் றோயல் ஏர் போர்ஸில் பணிபுரிந்தார். தொடக்க கால பயிற்சி முடிந்த பின்னர் இவர் ஆர்.ஏ.எப்.பிலிம் யூனிட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் பின்னர் யுத்தகளத்தில் போர்க்காட்சிகளை படமாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.போர் முடிந்த பின் இவர் நடிப்பை தனது தொழிலாக ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை உயர்த்திக் கொண்டார். 

பின்னர் இவர் றோயல் அக்கடமி ஆப் டிராமாடிக் ஆர்ட் என்ற அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் ஆயுட்காலம் முழுவதும் இந்த அமைப்பின் புரலவர் ஆக இருந்தார். இவர் காந்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார். 1983ஆம் ஆண்டில் காந்தி திரைப்படத்துக்காக இவருக்கு சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் இயக்குநர் என்ற வகையில் இரண்டு ஒஸ்கார் விருதுகள் அளிக்கப்பட்டன. இவர் நான்கு பாப்டா விருதுகளும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளும் பெற்றுள்ளார். 

பிரைட்டன் ராக், தி கிரேட் எஸ்கேப், 10 ரில்லிங்டன் பிளேஸ், மிராக்கிள் ஆன் 34த் ஸ்டிரீட், ஜூராசிக் பார்க் ஆகிய திரைப்படங்கள் இவர் நடித்த பல படங்களில் நன்கு அறியப்பட்டவையாகும். 1959ஆம் ஆண்டில் இவர் சக நடிகர் பிரியன் போர்ப்ஸ் உடன் இணைந்து திரைப்படத்தில் ஈடுபடத் தொடங்கினார். இருவரும் சேர்ந்து தயாரித்த முதல் படமான தி ஆங்கிரி சைலன்ஸ் பலத்த வெற்றி பெற்றது. இருவரும் சேர்ந்து சில வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளனர். 

1969இல் இவர் இயக்குநராக அவதாரம் எடுத்தார். 1970இற்குப் பின்னர் இவர் முழு இயக்குநராக மாறி விட்ட போதும் எப்போதாவது நடிப்பதும் உண்டு. காந்தி திரைப்படம் இவரை உலகின் சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக மாற்றி விட்டது. காந்தி திரைப்படம் எட்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்று அக்கடமி விருது சாதனை படைத்தது. இவர் ஒரு மனிதநேய ஆர்வலர். மனித நேயப்பணிகளுக்காக இவர் 1983இல் வழங்கப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். 

இவருக்கு பிரிட்டிஷ் அரசு 1976ஆம் ஆண்டில் சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 17 ஆண்டுகள் கழித்து இவருக்கு ஆயுட்கால பிரபு பட்டம் வழங்கப்பட்டது. இவர் ரிச்மண்ட் அபான் தேம்ஸ் பேரன் அட்டன்பரோ என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டார். இவருடைய கடைசிக் காலம் மிகவும் துயரம் நிறைந்த காலமாக இருந்தது. 

2004 கிறிஸ்துமஸ் அன்று தாய்லாந்தைத் தாக்கிய சுனாமியில் இவருடைய மகளும், பேர்த்தியும் இறந்து விட்டனர். அதற்குப் பின்னர் அவர் கிறிஸ்மஸ் கொண்டாடுவது நின்று விட்டது. அவருக்கு மனைவி ஷீலா சிம் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு திரையுலக டைனோசர் மறைந்து விட்டது. ஆனால் இவருடைய திரைப்படங்கள் குறிப்பாக காந்தி திரைப்படம் இவரை உலகத்தினருக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

சிவப்பு திரைப்படத்தில் ஈழ அரசியல் பின்னணியில் ராஜபக்‌ஷ

இலங்கை இனப்போரில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான, புனைவுகளோடு 'இனம்', 'புலிப்பார்வை', 'மெட்ராஸ் கபே' போன்ற உண்மைக்கு புறம்பான திரைப்படங்கள் தமிழகத் தமிழ் மக்களை கோபம் கொள்ள வைத்தன. இதனால் இந்தப் படங்களை அவர்களும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களும் புறக்கணித்தார்கள். 

இதெல்லாம் ஒருமுறம் இருக்க, ராஜேபக்‌ஷ தற்போது முதல் படத்துக்காக அலையும் உதவி இயக்குநர்களை குறிவைத்துப் பிடித்து அவர்களுக்கு நிதியுதவி செய்து, தமிழ்நாட்டில் வாழும் இன உணர்வாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக படங்களை தயாரிக்க, ஒரு டீமை களத்தில் இறக்கி இருகிறாராம். இப்படி தெரிந்தோ தெரியாமலோ விலைபோய் இருக்கிறது சினிமாவில் பணம் புகழுக்காக அலையும் ஒரு குழு. அது தற்போது 'சிவப்பு' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கும் குழு என்று தெரிய வந்திருக்கிறது. 

ஈழமக்களின் துயரத்தை தூக்கிப்பிடிப்பதுபோல, தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவது போலவும், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நினைப்பது தமிழ்நாட்டில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுமே காரணம் என்றும் சொல்லப்பட்டிருகிறதாம் படத்தில். திரைக்கதை உதவி ராஜபக்‌ஷ தம்பி கோட்டாபயவாகக் கூட இருக்கலாம். ஆனால் தமிழக அகதிகள் முகாம்கள் சிறைக்கூடங்கள் அல்ல என்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளும், முகாம்களிலிருந்து அவர்கள் வேலைக்குச் செல்லவும், எல்லா தமிழர்களையும் போல் வாழவும், குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கவும் என்று பல சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

தனி வீடு எடுத்து வாழும் நிலைக்கு பொருளாதாரம் உயர்ந்தால் தாராளமாக உள்ளூர் காவல் நிலையத்தில் தங்களைப் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். முகாம்களில் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுகிறது. இவற்றுக்கு அரசுக் கடன் கொடுக்கப்படுகிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முகாம்களிலிருந்து கோடம்பாக்கத்தில் நடிக்கவும், படங்களை இயக்கவும் கூட பல இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பொறியியல் படித்து ஐ.ரி நிறுவனங்களில் பணிபுரிய வந்துவிட்டார்கள். 

தமிழ்நாட்டு தமிழ்க் குடும்பங்களுடன் திருமண உறவு ஏற்பட்டு வருகிறது. ஆனால் 'சிவப்பில்' இந்த உண்மை நிலை அப்படியே மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. சிவப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் உண்மையாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். 

அத்துமீறும் நடன இயக்குநர்கள்

Written By Namnilam on Thursday, August 28, 2014 | 11:03 PM

ரசிகர்களின் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறன. அவற்றில் மிக முக்கியமானது நடன் இயக்குநர்களின் வரம்பு மீறல்கள். படிப்புக்காக வாத்தியார் மாணவர்களை அடிப்பதை எப்படித் தவறாக கருத முடியாதோ, அப்படிதான் நடன இயக்குநர்கள் படப்பிடிப்பு தளங்களில், ஒத்திகைகளில் நடிகைகளை கையாள்வதை தவறாக கருத முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனாலும் மாணவர்கள் மீதுள்ள ஜாதி கோபம், மாணவனின் தந்தை மீதுள்ள தனிப்பட்ட கோபம் அல்லது தன் வீட்டு கோபத்தை மாணவர்கள் மீது காட்டுவது போன்றவை தவறானவை, சட்டத்தால் தண்டிக்கப்பட்டக் கூடியவை. அப்படிப்பட்ட வரம்பு மீறல்கலைத்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பொதுவாக ஒரு நடன இயக்குநர் நடன அசைவுகளை கம்போஸ் செய்வதோடு அவர் பணி முடிந்தது. அவர் கம்போஸ் செய்வதை நடிகர், நடிகைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவரது உதவியாளர்கள்.

அதை கண்கணிப்பதும், முறைப்படுத்துவதும், திருத்துவதும்தான் நடன இயக்குநரின் பணி. ஆனால் சிறு படங்களில் இது எல்லாமே தலை கீழாக நடக்கும். அதுவும் முதல் படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகை இந்த நடன இயக்குநர்களிடம் படும்பாடு வெளியில் சொல்ல முடியாத நரக வேதனைகள். உலகத்திலேயே பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவர் சிறு படங்களில் அறிமுகமாகும் புதுநடிகை. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று இயக்குநர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒரு பக்கம்.

சம்பளத்தை சரியாக கொடுக்காமல், நல்ல வசதிகள் செய்து கொடுக்காமல், தயாரிப்பாளர்கள் கொடுக்கும் டார்ச்சர் இன்னொரு பக்கம். சரி எப்படியாவது முன்னுக்குவர இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டால், நாலு பேருக்கு முன்னால் இந்த நடன இயக்குநர் கொடுக்கும் டார்ச்சர்தான் மிகக் கொடுமையானது. புதுமுக நடிகைகள் தினமும் படப்பிடிப்புக்கு வந்ததும் நடனம் ஆடுவதற்கு முன்பு தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நடன இயக்குநர்கள் நிறையவே இருக்கிறார்கள். காலில் விழத் தயங்கும் நடிகைகளிடம் நடன இயக்குநரின் அல்லக் கைகள், அவரு அப்படிபட்டவரு, இப்படி பட்டவரு.

அந்த நடிகை இவரு கால்ல விழுந்ததால்தான் அவ்வளவு உயரத்துல இருக்கா, இப்படி ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்து நடிகையை ப்ரைன் வாஷ் பண்ணிவிடுவார்கள் அப்புறம் நடனம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று அத்தனை பேர் முன்னிலையிலும் நடிகையை இறுக கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து லவ் பீல் கொண்டுவருவார்களாம். ஏன் இதை பெண் உதவியாளரை வைத்து சொல்லிக் கொடுக்கக் கூடாதா. மாட்டர்கள். இவர்கள்தான் செய்வார்கள். தன்னை மதிக்காத, தனக்கு வணக்கம் வைக்காத, காலில் விழுந்து வணங்காத புதுமுக நடிகைகளுக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத தண்டனைகள் கிடைக்கும், ஒரு நடிகை தன்னிடம் சிரித்து பேசா விட்டால்கூட மறுநாள் கடுமையான ஸ்டெப்ஸ்களை வைத்து நடிகையைப் பாடாய்படுத்தி விடுவார்கள்.

புது ஸ்டெப்ஸ்களை போட முடியாமல் நடிகை திண்டாடும்போது நிறைய டேக் போகும், இயக்குநர் கத்தி தீர்ப்பார். முடிந்தால் நடிகையின் கன்னத்தில் ஒரு பளார் வைப்பார். தயாரிப்பாளர் பிலிம் வீணாப்போவுது என்று கத்துவார். இந்த சினிமாவே வேண்டாம் செத்துப் போகலாம் என்று தோன்றும் நடிகைக்கு. அவர் ஒரு பிரபலாமான நடன இயக்குநர்.

ஒரு சிறிய படத்துக்கு நடனம் அமைத்தார். அதில் அறிமுகமான புதுமுக நடிகைக்கு இவரா நமக்கு நடனம் சொல்லித் தரபோகிறார் நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று மகிழ்ச்சி. சில நாட்களிலேயே நடன இயக்குநரின் இன்னொரு முகம் தெரிந்தது. கடுமையான அசைவுகளை கொடுத்து பாடாய் படுத்தினார்.

நடிகைக்கு காரணம் புரியவில்லை. சில அல்லக் கைகள் வந்து, "மாஸ்டர்கிட்ட 'தனியா போய்' ரிகர்சல் பண்ணிக்கோ நல்லா சொல்லித் தருவார். நீ எங்கேயோ போய்டுவ. அந்த நடிகை இருக்காங்களே அவுங்க சாரோட தனியா ரிகர்சல் பண்ணினவங்கதான்" என்று ஆலோசனை சொன்னார்கள். அதை நம்பிய நடிகை மாஸ்டரை தனியாக சந்தித்தார். அதன் பின்னரும் மாஸ்டரின் ஸ்டெப்ஸ் கடுமையாகத்தான் இருந்தது.

நடிகைக்கு காரணம் புரியவில்லை. ஒரு வழியாக படம் முடிந்த பிறகு காரணத்தை அறிய விரும்பினார் நடிகை. மாஸ்டருக்கு நெருக்கமான ஒரு பெண்ணிடம் இது பற்றி கேட்டார். அந்த பெண் சொன்ன காரணம் நடிகையை அதிர்ச்சி அடைய வைத்தது. "மாஸ்டர் உன்னை விட உங்க அம்மாகிட்டேருந்துதான் ரொம்ப அன்பை எதிர்பார்த்தார்" என்றார். தன் அழகான அம்மாவோடு அந்த நடிகை அந்த ஒரு படத்தோடு சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டு சொந்த ஊருக்கே போய் விட்டார்.

வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு. இந்த தொல்லைகளில் இருந்து விடுபட நடிகைகளுக்கு இருக்கும் ஒரே வழி. எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வாய்ப்பு வந்தாலும் சரி வாராவிட்டாலும், இந்த வாய்ப்பு போனாலும் சரி என்று எதையும் எதிர்த்து நிற்க துணியவேண்டும். புதுமுக நடிகைகளுக்கு ஒரு சின்ன அட்வைஸ்.

தவறான அணுகுமுறைகள் தெரிந்தால் அந்த இடத்திலேயே சீறி விடுங்கள். அதன் பிறகு எல்லாமே சரியாக நடக்கும், எல்லா நடன இயக்குநர்களுமே இப்படித்தான் என்று குத்துமதிப்பாக சொல்லிவிடவும் முடியாது. நடனத்தை தெயவமாக மதிக்கிற நடன இயக்குநர்களும் உண்டு. புதுமுக நடிகைகளை தங்கள் மாணவி போல, மகளைப்போல கருதும் நடன இயக்குநர்களும் உண்டு.

மீண்டும் வருகிறார் ஜோதிகா

Written By Namnilam on Saturday, August 16, 2014 | 12:49 PM

எப்போ, எப்போ என கேட்டுக்கொண்டிருந்த ஜோதிகாவின் ரசிகர்களுக்கு இதோ கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஹவ் ஓல்டு ஆர் யூ?' படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் ஜோதிகா நடிக்க இருக்கிறார். 

ஜோதிகா போன்ற நல்ல நடிப்புத்திறமை வாய்ந்த நடிகைகள் திருமணத்திற்கு பிறகு அவ்வளவு எளிதாக நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் அப்படி அவர்கள் சம்மதித்தால் அது நிச்சயம் அவர்களை கட்டிப்போட்ட ஒரு கதைக்காகத்தான் இருக்கும். இங்கே ஜோதிகா விஷயத்தில் நடந்திருப்பதும் கூட அதேதான். இந்தக்கதை ஜோதிகாவுக்கு அமைந்ததில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன் நடிப்பால் அனைவரையும் அசரடித்த மஞ்சு வாரியர் நீண்ட இடைவேளைக்குப்பின் மறு பிரவேசம் நிகழ்த்தியது இந்தப்படத்தின் மூலம்தான். 

பெண்ணின் பலத்தை, மகத்துவத்தை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்தப்படம் மஞ்சு வாரியருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுத் தந்ததோடு அவரது மறுபிரவேசம் வெற்றிகரமானதாகவும் அதேசமயம் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கியுள்ளது. மஞ்சுவுக்கு கிடைத்த அதே பாராட்டுக்கள் இங்கே ஜோதிகாவுக்கும் கிடைக்கலாம். இந்தப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது. தமிழில் இந்தக் கதையை அதன சாராம்சம் கெட்டுவிடாமல அப்படியே கொடுக்கவேண்டும் என்பதற்காக மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழிலும் இயக்குகிறார் என்பது இன்னொரு ஆறுதலான விஷயம். 

மறக்க முடியாத ஹொலிவூட் படங்கள்: பூமிக்குப் பிறகு

பூமிக்கு வெளியே மனிதன் வசிப்பதற்கு ஏற்ற சூழலை மொத்த உலகமும் தேடி அலைகிறது. செவ்வாய் கிரகத்துக்கு சென்ற 'கியோரியாசிட்டி' விண்கலம் தன் பெயருக்கேற்ப உயிர்வாழ ஏற்ற சூழல் தென்படுமா என்று அக்கிரகத்தில் ஆர்வத்துடன் மேய்ந்து கொண்டிருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளின் தொன்மங்களும் பூமிக்கு வெளியே வேறொரு உலகம் இருப்பதாகவே நம்மை நினைக்க வைக்கின்றன. 

எல்லையற்ற கனவுகளை காட்சியாக்குவதன் சாத்தியத்தை பல வருடங்களுக்கு முன்பே எட்டிவிட்ட ஹொலிவூட் திரையுலகம் தந்த பல படைப்புகள், பூமிக்கு வெளியேயான மனித வாழ்க்கை குறித்து பேசுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக ஜேம்ஸ் கமரோனின் 'அவதார்', முப்பரிமாண படமான 'வோல்-ஈ', மனோஜ் ஷ்யாமளனின் 'ஆப்டர் ஏர்த்' போன்ற படங்களை சொல்லலாம். 

வாழ்வதற்கான சூழல் பூமியில் முற்றிலும் சீர்கேடைந்த நிலையில், வேறு கிரகத்துக்கு குடியேறும் மனித வாழ்க்கை குறித்த படங்கள் இவை. அந்த வரிசையில், 'டிஸ்ட்ரிக்ட்- 9' படத்தின் மூலம் புகழ்பெற்ற நீல் ப்ளோம்காம்ப் இயக்கிய 'எலிஷியம்’ என்ற அறிவியல் புனைகதை திரைப்படம் இந்தியாவில் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாக உள்ளது. 

அறிவியல் கற்பனைகளுக்கும் அப்பால் அடிப்படை மருத்துவ வசதி, உயிர்வாழ மனிதன் செய்யும் தந்திரங்கள், எதிர்கால மனிதனின் வாழ்வுநிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இக்கதையின் லேசான சாயல் கொண்ட 'வோல்-ஈ' படத்தில் குப்பைகள் நிறைந்த பூமியை காலி செய்துவிட்டு மொத்த மனித இனமும் விண்வெளியில் புதிய உலகத்தை படைத்து அதில் குடியேறி விடுகிறது. 

பூமியில் தேங்கிய குப்பையை சுத்தம் செய்யும் 'ஏழை' ரோபோதான் படத்தின் நாயகனான வோல்-ஈ. பூமிக்கு வெளியே குடியேறியவர்கள் நவீன வசதிகளால் சோம்பேறிகளாகி உடல் பெருத்து அவஸ்தைப்படுவதை நகைச்சுவையாக சொன்ன படம் அது. 'எலிஷியம்' வேறு வகை. கிட்டத்தட்ட நரகமாகி விட்ட பூமியில் வாழ சபிக்கப்பட்ட ஏழைகளுக்கும், மேம்பட்ட வாழ்க்கை தரும் 'எலிஷியம்' என்ற விண்வெளி குடியிருப்பில் குடியேறிய பணக்காரர்களுக்கும் இடையிலான வாழ்க்கைப் போராட்டம் இப்படத்தில் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ரசிகர்களும், விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர். 'போர்ன் ஐடெண்டிட்டி' வரிசை படங்கள் மூலம் உலகமெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள மேட் டாமன், 'சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்' படத்துக்காக ஒஸ்கர் வென்ற அற்புத நடிகை ஜூடி பாஸ்டர் இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கொடூரமான ரோபோக்களால் ஆளப்படும் பூமியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் அல்லாடும் ஏழைகள் அதிநவீன சுகாதார வசதி கொண்ட எலிஷியம் குடியிருப்புக்குள் திருட்டுத்தனமாக ஊடுருவ முயல்வது தான் படத்தின் முக்கிய கரு. ஊடுருவலை எதிர்க்கிறார் அக்கிரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் ஜோடி பாஸ்டர். புவிவாழ் ஏழைத் தொழிலாளிகளில் ஒருவரான மேட் டாமன் பணியின் போது கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை நெருங்கும் அபாயத்துக்கு தள்ளிவிடப்படுகிறார். இடையே சதிவலை, ஏழ்மையின் வலி உள்ளிட்ட பல விஷயங்களை வியக்கவைக்கும் தொழில்நுட்பங்களுடன் உருவான இப்படம் நேர்த்தியுடன் சொல்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். 

படம் எதிர்காலத்தில் நடக்க சாத்தியமுள்ள கதை கொண்ட படமாக ரசிகர்கள் கருதினாலும் இது நிகழ்கால கதை தான் என்கிறார் படத்தின் இயக்குநர் நீல் ப்ளோம்காம்ப். வறிய நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயலும் தற்காலச் சூழலை தான் படமாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. 

இதேபோன்ற கதைப் பின்னணி கொண்ட ‘ஆப்டர் ஏர்த்’ படம் படுதோல்வியடைந்தது. இத்தனைக்கும் மனோஜ் ஷ்யாமளன் தான் படத்தை இயக்கவேண்டும் என்று தவமாய் தவமிருந்தார் படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான வில் ஸ்மித். எனினும் திரைக்கதையில் இருந்த தொய்வும் வழக்கமான ஏலியன் பாத்திரப்படைப்பும் அப்படத்தை தோல்வியடையச் செய்துவிட்டன. 'எலிஷியம்' படத்துக்கு நிச்சயம் அந்த ஆபத்து இல்லை.

இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான்

Written By Namnilam on Thursday, August 14, 2014 | 9:03 AM

ஆண்டுக்கு சராசரியாக 100 படங்கள் வெளிவந்தால் அதில் 5 படங்கள் மட்டுமே வெற்றி பெறுகிறன. பத்துப் படங்கள் நஷ்டம் வராமல் தப்பிக்கின்றன. மீதி 85 படங்கள் தோல்வி அடைவதோடு பெரும் நஷ்டத்தையும் எதிர்கொள்கின்றன. இந்த 85 தயாரிப்பாளர்களில் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் சினிமாவுக்கு கும்பிடு போட்டுவிட்டு போய்விடுகிறார்கள். 

இதற்கு என்ன காரணம் என்று பலர் கூடி யோசிக்கத்தேவையில்லை. ‘திட்டமிட்டு படம் எடுக்காததே’ காரணம் என்று எல்.ஐ.சி. உச்சியிலிருந்து உரக்க கூவலாம். சினிமா வெறுமனே கலை என்றோ, வியாபாரம் என்றோ, தொழில் என்றோ கூறிவிடமுடியாது. இந்த மூன்றும் கலந்த கலவை என்றே கூறலாம். நல்ல படைப்பு, நல்ல தொழில்முறையில் உருவாக்கப்பட்டு புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்யப்படுமானால் அது வெற்றிப் பட்டமாகிறது. 

மிஷ்கின் இயக்கிய முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’ நல்ல படம்தான். ஆனால் அதை வியாபாரம் செய்யத் தெரியாமல் தோல்வி அடையச் செய்துவிட்டனர் அப்போதிருந்தவர்கள்.ஆனால் ‘எந்திரன்’ காவியம் அல்ல. அதன் தொழில் நேர்த்தியும் வியாபார உத்தியும் படத்தை வெற்றி பெற வைத்தது. ஆக சினிமா பாணியில் சொன்னால் கிரியேட்டிவ், மேக்கிங், பிசினஸ் இந்த மூன்றும் இணைந்தால் படம் ஹிட். இந்த மூன்றையும் சரிவர தெரியாதவர்கள், புரியாதவர்கள் படம் எடுக்காமல் இருப்பதே அறிவுடைமை. இந்த வரைமுறையைத் தாண்டி சில படங்கள் மகத்தான வெற்றி வெறுவதும், சில படங்கள் தோல்வியடைவதும் விதிவிலக்கானதே. 

ஒரு படத்தை திட்டமிட்டு எடுப்பது எப்படி? இது மிகவும் இலகுவானது. இன்றைய ரசிகர்களின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கதை, திரைக்கதையை உருவாக்க வேண்டும். அடுத்து அந்த திரைக்கதைக்கான பட்ஜெட்டை தீர்மானிக்க வேண்டும். ஒரு வீட்டுக்குள் நடக்கும், திகில் கதை என்றால் அதற்கு ஒரு பட்ஜெட் இருக்கிறது. அதே கதை காட்டுக்குள் நடக்கிறதென்றால் அதற்கு தனி பட்ஜெட் இருக்கிறது. அதே கதை மக்கள் கூடும் பொது இடங்களில் நடக்கிறதென்றால் அதற்கொரு பட்ஜெட் இருக்கிறது. உங்கள் திரைக்கதை எந்த மாதிரியான பட்ஜெட்டுக்கு உகந்தது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். 

அதோடு அதற்கான கால அவகாசத்தையும் தீர்மானிக்க வேண்டும். மிக முக்கியமாக படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு ஒத்திகைக்கு அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நேரத்தையும், செலவையும் கணிசமாக மிச்சப்படுத்தும். கே.பாலச்சந்திரன் மிகப்பெரிய வெற்றிப் படங்களை மிகக் குறைந்த பட்ஜெட்டிலும் மிகக் குறைந்த நாட்களிலம் இயக்கினார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இயக்குனர் சிகரெட் பிடித்துக் கொண்டு சீனும் டயலாக்கும் எழுதினால் அந்தப் படம் ஒரு காலத்திலும் தேறாது. 

மீண்டும் இணையும் கமல் - மாதவன்

Written By Namnilam on Saturday, July 19, 2014 | 4:02 PM

கமலுடன் மாதவன் இணைந்த 'அன்பே சிவம்' படத்தை தமிழ் ரசிகர்கள் மறக்கவே முடியாது. கமல், மாதவன் மீண்டும் இணைந்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது. தற்போது மீண்டும் இவர்கள் இணைகிறார்கள். ஆனால் படத்தில் நடிப்பதற்காக இல்லை. ஒரு படத்தின் குரல் நடிப்புக்காக(டப்பிங்) இணைகிறார்களாம். 

அப்பா, மகன், பேரன் என்ற வரிசையில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா ஆகிய மூவரும் இணைந்து நடித்து தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் மனம். இந்தப் படத்தைச் சுடச்சுட தமிழில் மறுஆக்கம் செய்து வெளியிடலாம் என்று முயன்றார்கள் ஏ.வி.எம் நிறுவனத்தார். 

ஆனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களைக் கொண்ட குடும்பம் தமிழில் இல்லை. சிவாஜி, பிரபு, விக்ரம்பிரபு நடித்து தமிழில் உருவாகியிருக்க வேண்டிய இந்தப் படம் அதற்கான பெருமையை தமிழ் சினிமாவுக்குக் கொடுக்கவில்லை. இதனால் இந்தப் படத்தை அப்படியே தமிழ் பேச வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். 

நாகார்ஜூனாவுக்காகத் தமிழ் பேசி குரல்நடிப்பை வழங்க இருப்பவர் மாதவன். நாகசைதன்யாவுக்காக குரல்கொடுக்க சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். அப்படியானல் நாகேஸ்வரரவுக்கு யார்? கமல் பேசினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை அணுகியிருக்கிறார்கள். அவரும் பேச ஒப்புக்கொண்டுவிட்டார்.

'உத்தமவில்லன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் 'மனம்' படத்துக்கு குரல் நடிப்பை வழங்க வருகிறார் கமல். 

அந்தரத்தில் தொங்கும் அமலாபாலின் கணவர்

அமலாபாலை திருமணம் முடித்து, ஹனிமூனையும் முடித்துவிட்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு தற்போது படம் இயக்கும் வாய்ப்புகள் எதுவுமே இல்லை. அஜித், விஜய், விக்ரம் என்று மாஸ் மசாலா நடிகர்களை வைத்து வரிசையாகப் படங்களை இயக்கியவர். 

அடுத்து சூர்யாவிடம் ஒரு கதை சொன்னார். முதலில் கதை ஒகே என்று சொன்ன சூர்யா அதன்பிறகு விஜய்கு அல்வா கொடுத்துவிட்டு வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். இதற்குக் காரணம் அவர் இயக்கிய எல்லாப் படங்களும் பேசப்பட்ட அளவுக்கு வியாபார ரீதியாக வெற்றி பெற்றதில்லை. இதனால் தொடர் வெற்றி கொடுத்துவரும் தனக்கு ஒரு தோல்விகூட அதலபாதளத்தில் தள்ளிவிடும் என்று முடிவு செய்தே அல்வா கொடுத்தாராம். சூர்யாவே புறக்கணித்த நிலையில் இவரை நம்பி முதலீடு செய்ய எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. 

இதனால் தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பிலேயே 'சைவம்' படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தடுமாறிக்கொண்டிருக்கிறார். கடைசிவரை கைவிடமாட்டேன் என்று சொன்ன விக்ரம், இயக்குநர் விஜய் தனது பரம எதிரியான சூர்யாவிடம் சென்றதால் தற்போது விஜய் போன் செய்தால் கூட எட்ட முடியாத அளவுக்கு அவரை பிளாக் லிஸ்டில் வைத்துவிட்டார் எனத் தெரிகிறது. 

இயக்குநர் விஜயின் நிலையைக் கேள்விப்பட்ட நடிகை ராதிகா தனது ராடான் நிறுவனத்தின் சார்பில் அவரை வைத்து ஒரு படம் தயாரிக்கிறேன் என்று சொல்ல பெருமகிழ்ச்சியடைந்தாரம் விஜய். ராதிகா தன்னிடம் கதை கேட்கமாட்டார் என்று நினைத்த விஜய்க்கு அதிர்ச்சி. 'உங்களிடமிருக்கிற கதையை முதலில் சொல்லுங்கள் அது பிடித்திருந்தால் அதைப் படமாக்குவது குறித்து யோசிப்போம்" பிரபலமான இயக்குநருக்கு என்னடா இது சோதனை என்று புலம்பியபடி வேறுவழியின்றி கதை சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்டுவிட்டு உடனே பதில் சொல்லாமல் "நாங்கள் கலந்துபேசிவிட்டு உங்களிடம் சொல்கிறோம்” என்று சொல்லியனுப்பிவிட்டர்களாம். 

இதுவரை ராதிகாவிடமிருந்து பதில் இல்லாததால் அந்தரத்தில் தொங்கும் திரிசங்கு நிலையில் புதுமாப்பிள்ளை வாழ்க்கையையும் சரிவர அனுபவிக்க முடியாமல், படவாய்ப்பும் கேள்விக்குறி என்ற நிலை. அடுத்து அமலாபாலின் மாமியார் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும். 

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க இசைப் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்

Written By Namnilam on Friday, July 18, 2014 | 3:36 PM

‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ‘ஹாலிவுட்’ வரை சிறகடித்துப் பறந்து, ‘ஸ்லம் டாக் மில்லியனைய்ர்’ படத்தின் பாடலுக்காகவும், பின்னணி இசைக்காகவும் ஒரே மேடையில் இரண்டு ‘ஆஸ்கார்’ விருதுகளை பெற்று இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பெருமையை தரணிக்கு நினைவூட்டி, நிலைநாட்டியவர், ஏ.ஆர். ரஹ்மான். 

தமிழ் ரசிகர்களால் ‘இசைப்புயல்’ என்றழைக்கப்படும் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கின்றது. 

இசை உலகில் 20 ஆண்டு காலம் பங்களித்து வருவதற்காக 24-10-2014 அன்று நடைபெறும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 

மேலும், வரும் காலங்களில் இந்தியாவை சேர்ந்த இளைய தலைமுறையினர் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இசை பற்றிய ஆராய்ச்சி செய்ய ஏ.ஆர். ரகுமானின் பெயரில் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக, பட்டம் வழங்கும் விழாவின் போது பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான பிரபல பாடல்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர். 

இந்த நிகழ்ச்சியை காண வருபவர்கள் வழங்கும் டிக்கெட் (நன்கொடை) கட்டணம் முழுவதும் இந்த உதவித் தொகைக்கு பயன்படுத்தப்படும் என பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

படப்பிடிப்பில் அடாவடித்தனம் நடிகை அனன்யாவால் ரூ.50 லட்சம் நஷ்டம் வில்லன் நடிகர் புகார்

அனன்யா நடித்த 'அதிதி' படம் சமீபத்தில் ரிலீசானது. இப்படத்தை நிகேஷ்ராம் தயாரித்து இருந்தார். இவரே இதில் வில்லன் கேரக்டரிலும் நடித்தார். அனன்யாவின் அடாவடி மற்றும் ஊதாரிதனமான செலவுகளால் ரூ.50 லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிகேஷ்ராம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இதகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– ‘அதிதி’ படத்தில் நடிக்க அனன்யாவை அணுகியதும் ரூ.22 லட்சம் சம்பளம் கேட்டார். அதை கொடுத்தோம். படப்பிடிப்புக்கு கணவர் என சொல்லப்படும் ஆஞ்சயேலுவை அழைத்து வந்தார். இருவரும் வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை ஒதுக்கினோம்.

பத்திரிகையாளர்களும், திரையுலகினரும் தங்களை பார்த்து விடுவர் எனச்சொல்லி அதில் தங்க மறுத்தார். அண்ணாசாலையில் உள்ள ஓட்டல் உணவுதான் பிடிக்கும். எனவே அங்கே ரூம் போடுங்கள் என்றார். அதையும் செய்தோம். சொந்த உபயோகத்துக்காக சொகுசு காரை எங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து ஊர் சுற்றினார்.

ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எங்களுக்கு தெரியாமல் ரொக்க பணத்தை வாங்கிக் கொண்டு அதையும் பில் கணக்கில் சேர்த்து விட்டார். அந்த தொகையை தர முடியாது என்றதும், படத்தில் நடிக்கமாட்டேன் என்றார். ஏற்கனவே அவரை வைத்து பாதி படம் எடுக்கப்பட்டு விட்டது. வேறு வழியின்றி பணத்தை கொடுத்தேன். படப்பிடிப்பில் அவர் சொல்லும் ஓட்டல்களில் போய் சாப்பாடு வாங்குவதற்கென்றே ஒரு வாடகை கார் சுற்றிக் கொண்டிருந்தது.

படப்பிடிப்புக்கு காலை 8 மணிக்கு தயாராக இருப்போம். ஆனால் ஓட்டலில் 10 மணிக்கு விழித்து 11 மணிக்குதான் படப்பிடிப்புக்கு வருவார். கென்யாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு அது ரத்தாகிவிட்டது. உடனே கென்யாவுக்கு ஏன் போகவில்லை என சண்டை போட்டு அதற்கான பயண செலவு தொகை ஒன்றரை லட்சத்தை எங்களிடம் வாங்கி விட்டனர்.

அனன்யாவும், ஆஞ்சநேயலுவும் எங்களுக்கு கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் ரூ.50 லட்சம் வரை இழந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகேஷ்ராம் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மலையாள படங்களிலும் நடிக்கிறார்.

ஒர் ஆச்சரிய ஆளுமை அஞ்சலிதேவி

50 வயதை எட்டிய அத்தனை பேரிடமும் அஞ்சலிதேவி என்ற பெயரைச் சொன்னால் உற்சாகம் பொங்கி வழியும். அஞ்சலிதேவியின் தேனினும் இனிய குரலும் அவரது நளினம் நிறைந்த நடனமும், பாந்தம் குறையாத நடிப்பும் என்றைக்குமே மறக்க முடியாதவை. 

கடந்த ஆண்டு தனது 87 வயதில் காலமான அஞ்சலி தேவிக்கு இது முதலாண்டு நினைவு. அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்கு மகளாகப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி தெலுங்கு திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் சென்னை அவருக்குப் பிடித்துப் போனதால் 40களில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். 

'அன்று டி.ஆர்.மகாலிங்கம் மெல்ல புகழ்பெற்று வந்த காலம், கிட்டத்திட்ட வளரும் நாயகன்தான். ஆனால் அஞ்சலிதேவி அதற்கு முன்பே பிரபலமாகிவிட்டார். என்றாலும் ஆதித்தன் கனவு’ படத்தின் மூலம் டி.ஆர் மகாலிங்கம் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பிறகு தமிழ்ரசிகர்களும் அஞ்சலிதேவியின் நவரச நடிப்புப் பிரசன்னத்திற்கு காத்திருக்க ஆரம்பித்த பொற்காலம் தொடங்கியது. 

லவகுசா படத்தின் சீதா தேவியாக நடத்தபிறகு கருப்பு வெள்ளை காலத்தின் 'ஐகானாக'வும் மாறினார் அஞ்சலிதேவி. இவர் ஏற்று நடித்த வரலாற்றுக் கதாபாத்திரங்களில் 'சாவித்திரி'யும் சாகா வரம்பெற்றது. மூத்த தெலுங்கு ரசிகர்கள் பலரது வீடுகளில் இன்னும் இவரது படங்களை பாதுகாக்கும் அளவுக்கு தனது சொந்த மாநில ஆந்திரத்தில் மங்காப் புகழ்பெற்றிருக்கும் அஞ்சலிதேவி, தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ, அவரை 1959இல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக்கி அழகு பார்த்தார்கள் தமிழர்கள். 

தமிழில் ரஜினியின் அம்மாவாக 'அன்னை ஓர் ஆலயம்' நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம். நடிப்போடு நின்றுவிடாமல் அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி 30 படங்களைத் தயாரித்திருக்கிறார். இன்னொரு ஆச்சர்யமும் இதுவரை வெளிவராத தகவலாகக் கிடைக்கிறது. சிவாஜி நாயகனாக அறிமுகமாக இருந்த 'பூங்கோதை' படத்தை அஞ்சலி தேவி தயாரித்தார். ஆனால், அந்தப் படத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட 'பராசக்தி' முதலில் வெளியாகிவிட்டது. 

சாய்பாபாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கும் அளவுக்கு அஞ்சலிதேவின் ஆன்மிகப் பக்கமும் அர்த்தம் பொதிந்தது. சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர், சென்னையிலுள்ள தன் வீட்டை சாய்பாபா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். 

ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குநர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான 'கொல்லபாமா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாதான் அஞ்சனிதேவியின் பெயரைக் கொஞ்சம் மாற்றி அஞ்சலிதேவியாக ஆக்கினார். அந்த படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற அஞ்சலிதேவி இதுவரை 350 தெலுங்கு, தமிழ், கன்னட, இந்தி படங்களிலும் நடித்து சாதனைத் தடம் பதித்திருக்கும் அஞ்சலிதேவியை ஒரு ஆச்சரிய ஆளுமை என்றால் மிகையில்லை.

சிம்பு எட்டி உதைத்த குட்டி சூப்பர் ஸ்டார் பட்டம்

சிலம்பரசன் என்ற தனது பெயரை எம்.ஜி.ஆர் போல எஸ்.டி.ஆர் என்று சுருக்கி வைத்துக் கொண்டவர் சிம்பு. ஸ்தீரி லோலன் என்ற பிம்பம் அவர் மீது கவிந்திருந்தாலும் சமீபகாலமாக அவர் மனமாற்றாம் அடைந்து வருகிறார்.

 இமயமலைக்கும் ரிஷிகேஸுக்கும் பயணம் செய்து தனது ஆன்மீக ஈடுபாட்டைக் காட்டி வருகிறார். மேலும் ஆன்மிக ஈடுபாடு தன்னை மாற்றிக்கொள்ள பெரிதும் உதவும் என தீவிரமாக நம்புகிறார். 

அவர் நம்பியதைப்போலவே தன்னுடைய அகந்தை அழிந்துவிட்டதாக நினைக்கும் சிம்பு தன்னுடைய பட்டமான 'young super star' என்னும் பட்டதை துறக்க முடிவு செய்துவிட்டதுதான். "தேவையற்ற சுமைகளை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளேன். என்னுடைய திரைவாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன்.

என்னுடைய இமேஜ், அது என்னுடைய ரசிகர்கள் இடையே ஏற்படத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன். சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் 'முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள்' வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன். 

திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி, எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்கான முதல் வழியாகும். 

என்னுடன் என்றென்றும் இருக்கும், இருக்க போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்” என்று அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருக்கிறார் சிம்பு.

சீனு ராமசாமியை மிரட்டிய ஹரிஸ் ஜெயராஜ்

Written By Namnilam on Thursday, July 17, 2014 | 3:52 PM

தரமான தமிழ் சினிமாவுக்காக முயன்று வரும் இயக்குநர்களில் ஒருவர் கவிஞர் சீனு. ராமசாமி. இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்துக்காக தேசிய விருது பெற்றவர். தற்போது விஷ்ணு நடித்துவரும் 'இடம் பொருள் ஏவள்' படத்தை இயக்கி வருகிறார். 

நடிகர் ஹரீஸ் ஜெயராஜ் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடித்து வெளியான 'அரிமா நம்பி' படத்தின் வெற்றிக்காக சென்னையின் ஏழு நட்சத்திர விடுதியில் 'பார்ட்டி' கொடுத்தார் விக்ரம் பிரபு. இதில் இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜும் இயக்குநர் சீனு. ராமசாமியும் கலந்து கொண்டனர். 

ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் இழிவான கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டதாக தெரியவருகிறது. "மூன்று கோடி ரூபாய் கார் வைத்திருந்தால் நீ பெரிய ஆள் கிடையாது. உன்னால் ஒரு தேசிய விருது வாங்க முடியுமா?" என்று சீனு. ராமசாமி திட்டியதாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாக "நீ நினைத்தால் கூட உன்னால் மூன்று கோடி ரூபாய் காரில் செல்லமுடியாது. ஆனால் நான் நினைத்தால் இந்த நிமிஷமே உன்னை என் காரில் ஏற்றிச் செல்லமுடியும். வார்த்தைகளை அளந்து பேசு" என்றாராம் ஹரீஸ் ஜெயராஜ். 

இவர்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக்கொண்டதற்கு பின்னணிக் காரணம் என்ன என்று விசாரித்தபோது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'தெகிடி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சீனு. ராமசாமி பேசிய பேச்சுதான் காரணம் என்று தெரிய வருகிறது. அப்படி என்னதான் பேசினார் சீனு.ராமசாமி? “இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ் இருவரையும் சின்ன படங்களைத் தயாரிப்பவர்கள் இசைக்காக நெருங்கவே முடியவில்லை. காரணம் சின்னத் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்துக்கு முதலீடு செய்யும் மொத்த பட்ஜெட்டை விட இவர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் ஊதியம் இரண்டு மடங்காக இருக்கிறது. 

"சிறு முதலீட்டில் தயாராகும் தரமான படங்களுக்கும் இவர்கள் இசையமைத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்று இருக்கும். இதை இவர்கள் யோசிக்க வேண்டும். பணத்தில் மட்டுமே குறியாக இருக்கக் கூடாது” என்று காட்டமாக பேசியிருக்கிறார். இதுபற்றி பார்ட்டில் ஏற்பட்ட விவாதம்தான் விவகாரமாகிவிட்டது என்கிறார்கள் அருகில் இருந்து தகராறைக் கவனித்தவர்கள். 

சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். 

இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு பின் இந்தியத் திரையுலகத்தின் புதிய கவர்ச்சிக் கன்னியான சன்னி லியோன் நடித்துள்ள 'பிங் லிப்ஸ்’ என்ற காணொளி முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. இந்தக் காணொளி 'அஞ்சான்' படக் காணொளியை விட மூன்று லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. இதன் மூலம் 'அஞ்சான்' காணொளியை அழகி 'சன்னி லியோன்' பின்னுக்கு தள்ளிவிட்டார். 

'பிங் லிப்ஸ்’ பாடல் காணொளியானது 'ஹொட் ஸ்டோரி 2' படத்தில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வியாபார கணக்கு. யூடியூப் பார்வையாளர்களை அள்ளும் எண்ணிக்கைக்கும் ஒரு படத்தின் வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவான ஒன்று. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களாகச் சொல்லப்படும் 'கோலி சோடா', 'மஞ்சப் பை' ஆகிய படங்கள் சில லட்சம் பார்வையாளர்களை மட்டுமே யூடியூபில் பெற்றன. 

ஆனால், இந்த இரண்டுப் படங்களும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்ததன. 'அஞ்சான்’ படத்தின் காணொளி முன்னோட்டப் பார்வைகள் இதுவரை 22,52,000 பேருக்கும் அதிகமாக உள்ளன. இவர்கள் அனைவரும் சராசரியாக 100 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் படம் பார்க்க வந்தால் மொத்த வசூல் தொகை 23 கோடி ரூபாய் கிடைக்கும். இவர்கள் தங்களது நண்பர்களில் ஒருவரிடம் சொன்னால் கூட அவர்கள் வந்து பார்த்தால் மொத்த வசூல் தொகை 46 கோடி ரூபாய் வந்து விடும். 'அஞ்சான்' படத்தின் தயாரிப்புச் செலவு 50 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் இந்த பார்வையாளர்களால் மட்டுமே 95 சதவீத வசூல் கிடைத்து விடும். 

இது எத்தனை நாள்களில் சாத்தியமாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு முன் உங்களுக்கு நேரமிருந்தால் சன்னியின் காணொளிப் பாடலை கீழே பாருங்கள்.

ரஜினி நடிக்கும் எந்திரன் 2 படத்தில் வில்லன் அமீர்கான்

எந்திரன் 2–ம் பாகம் தயாராகிறது. இதில் வில்லன் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார்.

எந்திரன் படம் 2010–ல் வந்தது. ரஜினி, ஜஸ்வர்யாராய் ஜோடியாக நடித்திருந்தனர். ஷங்கர் இயக்கினார். இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்தார். வில்லனாகவும் அவரே வந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஷங்கர் தயார் செய்துள்ளார்.

ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் முடிந்ததும் ‘எந்திரன் 2’ படப்பிடிப்பு துவங்குகிறது. எந்திரன் 2 படத்தில் வில்லன் கேரக்டருக்கு ரஜினிக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார். இதற்கான நடிகர் தேர்வு நடந்து வந்தது.

தற்போது இந்தி நடிகர் அமீர்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன் 2 படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எடுக்கின்றனர். எனவே அமீர்கான் நடித்தால் இந்தியில் படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என்று கருதி அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.

அத்துடன் உலகளாவிய வியாபாரத்துக்கு உதவும் என்றும், திட்டமிட்டு உள்ளனர். அமீர்கானும் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

சிம்புவுடன் இணையும் டாப்சி

Written By Namnilam on Wednesday, July 16, 2014 | 12:27 PM

சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தில் டாப்சி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமரசம் ஆகி இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இதில் இன்னொரு நாயகியும் இருப்பதுபோல் கதையை மேலும் மெருகேற்றி உள்ளாராம் இப்படத்தின் டைரக்டர் பாண்டிராஜ். 

அதில் நடிக்க நாயகி தேடினார். தற்போது டாப்சியை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து மும்பையில் வேறு படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்த டாப்சியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை உறுதிப்படுத்தினார். 

இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நடிக்க கேட்டு என்னை அணுகியுள்ளனர். இதற்கான பேச்சு நடக்கிறது. ‘ஆரம்பம்’ படத்தில் நடித்தபோது ரசிகர்கள் என்னை இரண்டாவது கதாநாயகியாக பார்த்தனர். ஆனாலும் எனது கேரக்டரில் நான் தனித்து நின்றேன். ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாராதான் நாயகியாக நடிக்கிறார். நான் இரண்டாவது நாயகியாக வருகிறேன் என்றார்.

மது அருந்தும் காட்சியில் நடித்தது ஏன்?: பிரியா ஆனந்த் விளக்கம்

விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த 'அரிமா நம்பி' படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் ஓட்டல் பாரில் ஆண்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற காட்சியில் பிரியா ஆனந்த் நடித்து இருந்தார். 

ஏற்கனவே ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட படங்களில் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மது குடித்து விட்டு போதையில் தள்ளாடுவது போன்று இப்படத்தில்தான் நடித்து இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரியா ஆனந்துக்கு எதிராக  விமர்சனங்களும் கிளம்பின. இந்த காட்சியில் நடித்தது ஏன் என்பதற்கு பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

கதைக்கு அந்த காட்சி தேவைப்பட்டது. மது அருந்துவது போல் நடித்தால்தான் நாம் சொல்ல வந்த கருத்து ஏற்கும்படியானதாக இருக்கும் என்று டைரக்டர் தெரிவித்தார். எனவேதான் மது அருந்துவது போல் நடித்தேன். ஒரு பெண் இது மாதிரி நடிக்கலாமா? என்கின்றனர். பெண் இப்படி நடந்து கொள்வதால் தான் கலாசார சீரழிவு நடக்கிறது என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. 
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger