Home » , » சிவப்பு திரைப்படத்தில் ஈழ அரசியல் பின்னணியில் ராஜபக்‌ஷ

சிவப்பு திரைப்படத்தில் ஈழ அரசியல் பின்னணியில் ராஜபக்‌ஷ

Written By Namnilam on Saturday, August 30, 2014 | 10:01 PM

இலங்கை இனப்போரில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான, புனைவுகளோடு 'இனம்', 'புலிப்பார்வை', 'மெட்ராஸ் கபே' போன்ற உண்மைக்கு புறம்பான திரைப்படங்கள் தமிழகத் தமிழ் மக்களை கோபம் கொள்ள வைத்தன. இதனால் இந்தப் படங்களை அவர்களும் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களும் புறக்கணித்தார்கள். 

இதெல்லாம் ஒருமுறம் இருக்க, ராஜேபக்‌ஷ தற்போது முதல் படத்துக்காக அலையும் உதவி இயக்குநர்களை குறிவைத்துப் பிடித்து அவர்களுக்கு நிதியுதவி செய்து, தமிழ்நாட்டில் வாழும் இன உணர்வாளர்களை கொச்சைப்படுத்தும் விதமாக படங்களை தயாரிக்க, ஒரு டீமை களத்தில் இறக்கி இருகிறாராம். இப்படி தெரிந்தோ தெரியாமலோ விலைபோய் இருக்கிறது சினிமாவில் பணம் புகழுக்காக அலையும் ஒரு குழு. அது தற்போது 'சிவப்பு' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியிருக்கும் குழு என்று தெரிய வந்திருக்கிறது. 

ஈழமக்களின் துயரத்தை தூக்கிப்பிடிப்பதுபோல, தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழமக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாவது போலவும், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நினைப்பது தமிழ்நாட்டில் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுமே காரணம் என்றும் சொல்லப்பட்டிருகிறதாம் படத்தில். திரைக்கதை உதவி ராஜபக்‌ஷ தம்பி கோட்டாபயவாகக் கூட இருக்கலாம். ஆனால் தமிழக அகதிகள் முகாம்கள் சிறைக்கூடங்கள் அல்ல என்பதையும், அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளும், முகாம்களிலிருந்து அவர்கள் வேலைக்குச் செல்லவும், எல்லா தமிழர்களையும் போல் வாழவும், குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கவும் என்று பல சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

தனி வீடு எடுத்து வாழும் நிலைக்கு பொருளாதாரம் உயர்ந்தால் தாராளமாக உள்ளூர் காவல் நிலையத்தில் தங்களைப் பதிவு செய்துவிட்டு தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். முகாம்களில் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுகிறது. இவற்றுக்கு அரசுக் கடன் கொடுக்கப்படுகிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். முகாம்களிலிருந்து கோடம்பாக்கத்தில் நடிக்கவும், படங்களை இயக்கவும் கூட பல இளைஞர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பொறியியல் படித்து ஐ.ரி நிறுவனங்களில் பணிபுரிய வந்துவிட்டார்கள். 

தமிழ்நாட்டு தமிழ்க் குடும்பங்களுடன் திருமண உறவு ஏற்பட்டு வருகிறது. ஆனால் 'சிவப்பில்' இந்த உண்மை நிலை அப்படியே மாற்றப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்கிறது. சிவப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் உண்மையாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோம். 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger