Home » » 16 ஆண்டுகளாக முதலிடம்! எரியும் நரியின் வெற்றிப் பயணம்

16 ஆண்டுகளாக முதலிடம்! எரியும் நரியின் வெற்றிப் பயணம்

Written By Namnilam on Saturday, August 30, 2014 | 9:56 PM

இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த நிறுவனம் மொஸில்லா. இந்நிறுவனத்தின் மிகச்சிறந்த தயாரிப்பான ஃபயர்பாக்ஸ் பிரௌசரைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். 31, மார்ச் 1998 இல் தொடங்கப்பட்ட மொஸில்லா நிறுவனம் 16 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. 

எரியும் நரி போன்று வடிவமைக்கப்பட்ட மொஸில்லாவின் சின்னம் உலகப்புகழ்பெற்றது. இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு புதிய வசதிகளையும், பாதுகாப்பையும் தருவதை இலக்காகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. ஓப்பன் சோர்ஸ் முறையில் இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முயற்சியால் உருவானது ஃபயர்பாக்ஸ் இணைய உலாவி.ஃபயர்பாக்ஸ் உலாவியின் முதல் பதிப்பு 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 

பொதுத்தரவு நிறுவனம் இந்நிறுவனம் ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் பொதுத்தரவு முறையில் தொடங்கப்பட்டது என்பதால் இந்நிறுவனத்தை நடத்துவதற்கான நிதியை நன்கொடைகள் மூலமாகத் திரட்டுகிறது. ஃபயர்பாக்ஸ் முதல் பதிப்பு வெளியீடு பற்றி நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்து சுமார் 10ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியை அளித்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். நிதி மட்டுமல்லாது கணினி மென்பொருள் வல்லுநர்கள் பலரும் தங்களது திறனையும் அறிவையும் மொஸில்லா நிறுவனத் தயாரிப்புகளுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி அளித்து வருகின்றனர். 

ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் உள்ள எண்ணற்ற வசதிகள் உருவானதற்கு காரணமே இதுபோன்ற தன்னார்வலர்களின் பங்களிப்புதான். எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகவே மொஸில்லாவின் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இணையத்தைப் பயன்படுத்தும் 80 சதவீதம் பேரின் கணினிகளில் ஃபயர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், அதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். 

முதலிடத்தில் எரியும் நரி அண்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். ஃபயர்பாக்ஸ் உருவானபோது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் அதிகமான கணினிகளில் இடம்பிடித்திருந்த ஒரே பிரௌசர். விண்டோஸ் இயங்குதளத்தின் துணையால் அனைத்து கணினிகளிலும் எளிதாக இடம்பிடித்திருந்தது. 

எவ்விதத் துணையுமின்றி இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு தரமான வசதிகளை அளித்து மட்டுமே வலுவான இடத்தைப் பிடித்தது ஃபயர்பாக்ஸ். ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்த ஒரு சில மென்பொருள்களில் இன்று வரை ஃபயர்பாக்ஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 80 உலக மொழிகளில் எரியும் நரி இது தந்த புதுமையான வசதிகள் பலவற்றைப் பார்த்து பின்னர் பல நிறுவனங்களும் பிரௌசர் தயாரிப்பில் இறங்கின. 

அதில் குறிப்பிடத்தக்கவை ஓபேரா பிரௌசர் மற்றும் கூகுள் நிறுவனத்தின குரோம் பிரௌசர் ஆகியவையாகும். ஃபயர்பாக்ஸ் அளித்தமுக்கிய வசதிகள்ஃபயர்பாக்ஸ் உலாவியின் முக்கியமான சிறப்பாக அமைந்தவை ஆட் ஆன் என்று அழைக்கப்படும் சிறு சிறு கூடுதல் மென்பொருள் தொகுப்புகளாகும். இணையத்தைப் பயன்படுத்துவோரின் விருப்பங்களுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்லாயிரம் மென்தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடிக்கும் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மொஸில்லா தெரிவித்துள்ளது. ஒன்லைன் பயன்பாட்டில் உள்ள பெரும் சிக்கல் தனிநபர் தகவல் திருட்டுதான். இதனைத் தடுக்கும் வகையில் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியை அளித்தது ஃபயர்பாக்ஸ்தான். ஃபயர்பாக்ஸில் உள்ள மற்றொரு சிறப்பு அதன் அனைத்து செட்டிங்குகளையும் பயனாளர் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். பயர்பாக்ஸ் பிரவுசர் இன்று 80இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. 

ஒரேநாளில் உலக சாதனை 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் பதிப்பு 3இன் மூலமாக உலக சாதனை ஒன்றை நிகழ்த்தும் திட்டத்தை ஃபயர்பாக்ஸ் வெளியிட்டது. இதன்படி ஒரே நாளில் சுமார் 80,02,530 பேர் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மொஸில்லா திருவிழா என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

இணைய வல்லுநர்கள் பலநூறு பேர் கூடி தங்கள் மென்பொருள் திறமையை, ஆய்வை மொஸில்லாவிற்கு இந்நாளில் அளிக்கின்றனர். இதன் மூலமாக, இணையத்தை பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பாக இருக்கவும் புதிய வசதி மற்றும் தரத்தை நாம் பெறுவதையும் சாத்தியமாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன்களின் வருகையைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தும் வகையிலான ஃபயர்பாக்ஸ் பிளெசரையும் வெளியிட்டுள்ளது. 

அத்துடன் ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்களே அதிகமாக உள்ள சூழலில் கடந்த ஆண்டு மொஸில்லா தன் பயர்பாக்ஸ் இயங்கு தள ஸ்மார்ட் போன்களை வெளியிடவிருப்பதாக அறிவித்தது. மென்பொருள் தயாரிப்பில் ஃபயர்பாக்ஸ் மட்டுமல்லாது தண்டர்பேர்ட் எனப்படும் மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் டெஸ்க்டாப் கிளைண்ட் மென்பொருளையும் மொஸில்லா உருவாக்கி வழங்கியுள்ளது.இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த நிறுவனம் மொஸில்லா. இந்நிறுவனத்தின் மிகச்சிறந்த தயாரிப்பான ஃபயர்பாக்ஸ் பிரௌசரைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். 31, மார்ச் 1998 இல் தொடங்கப்பட்ட மொஸில்லா நிறுவனம் 16 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்கிறது. 

எரியும் நரி போன்று வடிவமைக்கப்பட்ட மொஸில்லாவின் சின்னம் உலகப்புகழ்பெற்றது. இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு புதிய வசதிகளையும், பாதுகாப்பையும் தருவதை இலக்காகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. ஓப்பன் சோர்ஸ் முறையில் இலாப நோக்கமின்றி தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முயற்சியால் உருவானது ஃபயர்பாக்ஸ் இணைய உலாவி.ஃபயர்பாக்ஸ் உலாவியின் முதல் பதிப்பு 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 

பொதுத்தரவு நிறுவனம் இந்நிறுவனம் ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் பொதுத்தரவு முறையில் தொடங்கப்பட்டது என்பதால் இந்நிறுவனத்தை நடத்துவதற்கான நிதியை நன்கொடைகள் மூலமாகத் திரட்டுகிறது. ஃபயர்பாக்ஸ் முதல் பதிப்பு வெளியீடு பற்றி நியூயோர்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு பக்க விளம்பரத்தினைப் பார்த்து சுமார் 10ஆயிரம் பேர், அந்த விளம்பரத்திற்கான நிதியை அளித்து, தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர். நிதி மட்டுமல்லாது கணினி மென்பொருள் வல்லுநர்கள் பலரும் தங்களது திறனையும் அறிவையும் மொஸில்லா நிறுவனத் தயாரிப்புகளுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி அளித்து வருகின்றனர். 

ஃபயர்பாக்ஸ் பிரௌசரில் உள்ள எண்ணற்ற வசதிகள் உருவானதற்கு காரணமே இதுபோன்ற தன்னார்வலர்களின் பங்களிப்புதான். எவ்விதக் கட்டணமுமின்றி இலவசமாகவே மொஸில்லாவின் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இணையத்தைப் பயன்படுத்தும் 80 சதவீதம் பேரின் கணினிகளில் ஃபயர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. இன்று, அனைத்து நாடுகளிலிருந்தும், பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், அதற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். 

முதலிடத்தில் எரியும் நரி அண்டார்ட்டிகா கண்டத்திலிருந்தும் இதற்கு உதவி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு இணையம் பயன்படுத்துபவர்களில், 80 சதவீதம் பேர், பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். ஃபயர்பாக்ஸ் உருவானபோது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் அதிகமான கணினிகளில் இடம்பிடித்திருந்த ஒரே பிரௌசர். விண்டோஸ் இயங்குதளத்தின் துணையால் அனைத்து கணினிகளிலும் எளிதாக இடம்பிடித்திருந்தது. 

எவ்விதத் துணையுமின்றி இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு தரமான வசதிகளை அளித்து மட்டுமே வலுவான இடத்தைப் பிடித்தது ஃபயர்பாக்ஸ். ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்து அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்த ஒரு சில மென்பொருள்களில் இன்று வரை ஃபயர்பாக்ஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 80 உலக மொழிகளில் எரியும் நரி இது தந்த புதுமையான வசதிகள் பலவற்றைப் பார்த்து பின்னர் பல நிறுவனங்களும் பிரௌசர் தயாரிப்பில் இறங்கின. 

அதில் குறிப்பிடத்தக்கவை ஓபேரா பிரௌசர் மற்றும் கூகுள் நிறுவனத்தின குரோம் பிரௌசர் ஆகியவையாகும். ஃபயர்பாக்ஸ் அளித்தமுக்கிய வசதிகள்ஃபயர்பாக்ஸ் உலாவியின் முக்கியமான சிறப்பாக அமைந்தவை ஆட் ஆன் என்று அழைக்கப்படும் சிறு சிறு கூடுதல் மென்பொருள் தொகுப்புகளாகும். இணையத்தைப் பயன்படுத்துவோரின் விருப்பங்களுக்கு வளைந்து கொடுக்கும் வகையில் பல்லாயிரம் மென்தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இந்த தொகுப்புகள் இதுவரை 300 கோடிக்கும் அதிகமான முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மொஸில்லா தெரிவித்துள்ளது. ஒன்லைன் பயன்பாட்டில் உள்ள பெரும் சிக்கல் தனிநபர் தகவல் திருட்டுதான். இதனைத் தடுக்கும் வகையில் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியை அளித்தது ஃபயர்பாக்ஸ்தான். ஃபயர்பாக்ஸில் உள்ள மற்றொரு சிறப்பு அதன் அனைத்து செட்டிங்குகளையும் பயனாளர் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான். பயர்பாக்ஸ் பிரவுசர் இன்று 80இற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. 

ஒரேநாளில் உலக சாதனை 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் பதிப்பு 3இன் மூலமாக உலக சாதனை ஒன்றை நிகழ்த்தும் திட்டத்தை ஃபயர்பாக்ஸ் வெளியிட்டது. இதன்படி ஒரே நாளில் சுமார் 80,02,530 பேர் பயர்பாக்ஸ் பிரவுசரைத் தரவிறக்கம் செய்தனர். இதன் மூலம் 24 மணி நேரத்தில் அதிகமான பேர்களால், தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற கின்னஸ் உலக சாதனையை பயர்பாக்ஸ் பிரவுசர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மொஸில்லா திருவிழா என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

இணைய வல்லுநர்கள் பலநூறு பேர் கூடி தங்கள் மென்பொருள் திறமையை, ஆய்வை மொஸில்லாவிற்கு இந்நாளில் அளிக்கின்றனர். இதன் மூலமாக, இணையத்தை பயன்படுத்துவதற்கும், பாதுகாப்பாக இருக்கவும் புதிய வசதி மற்றும் தரத்தை நாம் பெறுவதையும் சாத்தியமாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன்களின் வருகையைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தும் வகையிலான ஃபயர்பாக்ஸ் பிளெசரையும் வெளியிட்டுள்ளது. 

அத்துடன் ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்களே அதிகமாக உள்ள சூழலில் கடந்த ஆண்டு மொஸில்லா தன் பயர்பாக்ஸ் இயங்கு தள ஸ்மார்ட் போன்களை வெளியிடவிருப்பதாக அறிவித்தது. மென்பொருள் தயாரிப்பில் ஃபயர்பாக்ஸ் மட்டுமல்லாது தண்டர்பேர்ட் எனப்படும் மின்னஞ்சல்களை நிர்வகிக்கும் டெஸ்க்டாப் கிளைண்ட் மென்பொருளையும் மொஸில்லா உருவாக்கி வழங்கியுள்ளது.
Share this article :

Post a Comment

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger