Home » , » அத்துமீறும் நடன இயக்குநர்கள்

அத்துமீறும் நடன இயக்குநர்கள்

Written By Namnilam on Thursday, August 28, 2014 | 11:03 PM

ரசிகர்களின் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறன. அவற்றில் மிக முக்கியமானது நடன் இயக்குநர்களின் வரம்பு மீறல்கள். படிப்புக்காக வாத்தியார் மாணவர்களை அடிப்பதை எப்படித் தவறாக கருத முடியாதோ, அப்படிதான் நடன இயக்குநர்கள் படப்பிடிப்பு தளங்களில், ஒத்திகைகளில் நடிகைகளை கையாள்வதை தவறாக கருத முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனாலும் மாணவர்கள் மீதுள்ள ஜாதி கோபம், மாணவனின் தந்தை மீதுள்ள தனிப்பட்ட கோபம் அல்லது தன் வீட்டு கோபத்தை மாணவர்கள் மீது காட்டுவது போன்றவை தவறானவை, சட்டத்தால் தண்டிக்கப்பட்டக் கூடியவை. அப்படிப்பட்ட வரம்பு மீறல்கலைத்தான் இங்கே குறிப்பிடுகிறோம். பொதுவாக ஒரு நடன இயக்குநர் நடன அசைவுகளை கம்போஸ் செய்வதோடு அவர் பணி முடிந்தது. அவர் கம்போஸ் செய்வதை நடிகர், நடிகைகளுக்கு சொல்லிக் கொடுப்பது அவரது உதவியாளர்கள்.

அதை கண்கணிப்பதும், முறைப்படுத்துவதும், திருத்துவதும்தான் நடன இயக்குநரின் பணி. ஆனால் சிறு படங்களில் இது எல்லாமே தலை கீழாக நடக்கும். அதுவும் முதல் படத்தில் அறிமுகமாகும் புதுமுக நடிகை இந்த நடன இயக்குநர்களிடம் படும்பாடு வெளியில் சொல்ல முடியாத நரக வேதனைகள். உலகத்திலேயே பாவப்பட்ட ஜென்மங்களில் ஒருவர் சிறு படங்களில் அறிமுகமாகும் புதுநடிகை. நடிப்பு சொல்லிக் கொடுக்கிறேன் என்று இயக்குநர்கள் கொடுக்கும் டார்ச்சர் ஒரு பக்கம்.

சம்பளத்தை சரியாக கொடுக்காமல், நல்ல வசதிகள் செய்து கொடுக்காமல், தயாரிப்பாளர்கள் கொடுக்கும் டார்ச்சர் இன்னொரு பக்கம். சரி எப்படியாவது முன்னுக்குவர இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டால், நாலு பேருக்கு முன்னால் இந்த நடன இயக்குநர் கொடுக்கும் டார்ச்சர்தான் மிகக் கொடுமையானது. புதுமுக நடிகைகள் தினமும் படப்பிடிப்புக்கு வந்ததும் நடனம் ஆடுவதற்கு முன்பு தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நடன இயக்குநர்கள் நிறையவே இருக்கிறார்கள். காலில் விழத் தயங்கும் நடிகைகளிடம் நடன இயக்குநரின் அல்லக் கைகள், அவரு அப்படிபட்டவரு, இப்படி பட்டவரு.

அந்த நடிகை இவரு கால்ல விழுந்ததால்தான் அவ்வளவு உயரத்துல இருக்கா, இப்படி ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்து நடிகையை ப்ரைன் வாஷ் பண்ணிவிடுவார்கள் அப்புறம் நடனம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று அத்தனை பேர் முன்னிலையிலும் நடிகையை இறுக கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து லவ் பீல் கொண்டுவருவார்களாம். ஏன் இதை பெண் உதவியாளரை வைத்து சொல்லிக் கொடுக்கக் கூடாதா. மாட்டர்கள். இவர்கள்தான் செய்வார்கள். தன்னை மதிக்காத, தனக்கு வணக்கம் வைக்காத, காலில் விழுந்து வணங்காத புதுமுக நடிகைகளுக்கெல்லாம் வெளியில் சொல்ல முடியாத தண்டனைகள் கிடைக்கும், ஒரு நடிகை தன்னிடம் சிரித்து பேசா விட்டால்கூட மறுநாள் கடுமையான ஸ்டெப்ஸ்களை வைத்து நடிகையைப் பாடாய்படுத்தி விடுவார்கள்.

புது ஸ்டெப்ஸ்களை போட முடியாமல் நடிகை திண்டாடும்போது நிறைய டேக் போகும், இயக்குநர் கத்தி தீர்ப்பார். முடிந்தால் நடிகையின் கன்னத்தில் ஒரு பளார் வைப்பார். தயாரிப்பாளர் பிலிம் வீணாப்போவுது என்று கத்துவார். இந்த சினிமாவே வேண்டாம் செத்துப் போகலாம் என்று தோன்றும் நடிகைக்கு. அவர் ஒரு பிரபலாமான நடன இயக்குநர்.

ஒரு சிறிய படத்துக்கு நடனம் அமைத்தார். அதில் அறிமுகமான புதுமுக நடிகைக்கு இவரா நமக்கு நடனம் சொல்லித் தரபோகிறார் நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று மகிழ்ச்சி. சில நாட்களிலேயே நடன இயக்குநரின் இன்னொரு முகம் தெரிந்தது. கடுமையான அசைவுகளை கொடுத்து பாடாய் படுத்தினார்.

நடிகைக்கு காரணம் புரியவில்லை. சில அல்லக் கைகள் வந்து, "மாஸ்டர்கிட்ட 'தனியா போய்' ரிகர்சல் பண்ணிக்கோ நல்லா சொல்லித் தருவார். நீ எங்கேயோ போய்டுவ. அந்த நடிகை இருக்காங்களே அவுங்க சாரோட தனியா ரிகர்சல் பண்ணினவங்கதான்" என்று ஆலோசனை சொன்னார்கள். அதை நம்பிய நடிகை மாஸ்டரை தனியாக சந்தித்தார். அதன் பின்னரும் மாஸ்டரின் ஸ்டெப்ஸ் கடுமையாகத்தான் இருந்தது.

நடிகைக்கு காரணம் புரியவில்லை. ஒரு வழியாக படம் முடிந்த பிறகு காரணத்தை அறிய விரும்பினார் நடிகை. மாஸ்டருக்கு நெருக்கமான ஒரு பெண்ணிடம் இது பற்றி கேட்டார். அந்த பெண் சொன்ன காரணம் நடிகையை அதிர்ச்சி அடைய வைத்தது. "மாஸ்டர் உன்னை விட உங்க அம்மாகிட்டேருந்துதான் ரொம்ப அன்பை எதிர்பார்த்தார்" என்றார். தன் அழகான அம்மாவோடு அந்த நடிகை அந்த ஒரு படத்தோடு சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்டு விட்டு சொந்த ஊருக்கே போய் விட்டார்.

வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு. இந்த தொல்லைகளில் இருந்து விடுபட நடிகைகளுக்கு இருக்கும் ஒரே வழி. எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வாய்ப்பு வந்தாலும் சரி வாராவிட்டாலும், இந்த வாய்ப்பு போனாலும் சரி என்று எதையும் எதிர்த்து நிற்க துணியவேண்டும். புதுமுக நடிகைகளுக்கு ஒரு சின்ன அட்வைஸ்.

தவறான அணுகுமுறைகள் தெரிந்தால் அந்த இடத்திலேயே சீறி விடுங்கள். அதன் பிறகு எல்லாமே சரியாக நடக்கும், எல்லா நடன இயக்குநர்களுமே இப்படித்தான் என்று குத்துமதிப்பாக சொல்லிவிடவும் முடியாது. நடனத்தை தெயவமாக மதிக்கிற நடன இயக்குநர்களும் உண்டு. புதுமுக நடிகைகளை தங்கள் மாணவி போல, மகளைப்போல கருதும் நடன இயக்குநர்களும் உண்டு.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger