Home » » மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது, இராணுவம் திட்டவட்டம்

மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது, இராணுவம் திட்டவட்டம்

Written By Namnilam on Tuesday, March 11, 2014 | 10:12 PM

வலி.வடக்கில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்டபட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்டகாணிகள் அனைத்தும் அரசாங்கத்திற்குரிய காணி என்று இராணுவத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், நேற்றையதினம் யாழ். காங்கேசன்துறை படைமுகாமில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே 515வது பிரிகேடியர் ஈஸ்வரன் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார்.


அந்த இராணுவ அதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சதியடைந்த நலன்பரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக்குழுவின் பிரதிநிதிகளும் இராணுவத்தினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.


வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதுவரைகாலமும் கூறிய இராணுவத்தினர், ஏன் இப்பொழுது இவ்வாறு கூறுகின்றனர் என்பது எமக்குத் தெரியும்.


ஜெனிவாவில் தற்போது நடந்துவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் வலுவிழந்தால், மக்களின் காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கத் தயாரில்லை என்பது வெளிப்டையாகத்தெரிகிறது என்று இராணுவத்தினருடன் முரண்பட்டுவிட்டு பிரதிநிதிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger