Home » , » இதுவரை தற்கொலைக்கு முயற்சி செய்த சில பிரபலங்கள்

இதுவரை தற்கொலைக்கு முயற்சி செய்த சில பிரபலங்கள்

Written By Namnilam on Saturday, March 8, 2014 | 7:12 AM

இன்றைய காலத்தில் தற்கொலை என்பது கேக் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. எந்த ஒரு கஷ்டம் வந்தாலும், உடனே தற்கொலைக்கு முற்படுகின்றனர். அதிலும் தற்போது நிறைய மக்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.


ஒருவருக்கு மன இறுக்கமானது வந்துவிட்டால், அந்த மன இறுக்கமானது தற்கொலை செய்யும் அளவில் ஒருவரை தள்ளிவிடும். அப்படித் தான் பல ஹாலிவுட் பிரபலங்களுள் சில மன இறுக்கத்தினால் தற்கொலைக்கு முற்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனையின் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இங்கு தற்கொலைக்கு முயன்ற சில பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பாருங்கள் , தன்ன்ம்பிக்கையுடன் வாழுங்கள்.


drew

பைபோலார் டிஸ்ஆர்டரால் ட்ரூ பேரிமோர் பெரும் அவஸ்தைப்பட்டார். மேலும் இவர் போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்துக் கொள்வதைத் நிறுத்தியப் பின்னர், மன இறுக்கத்திற்கு ஆளாகி, இவர் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முயற்சித்தார். இருப்பினும் சரியான சிகிச்சையின் மூலம் இவரை காப்பாற்றிவிட்டார்கள்.


owen-wilson


2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் நாள் ஓவன் வில்சன் அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு, கைகளை அறுத்துக் கொண்டு, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதற்கு காரணமும் மன இறுக்கம் தான்


halle


ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலே பெர்ரி கார்பன் மோனாக்ஸைடு விஷத்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஏனெனில் இவரும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இறுதியில் இவர் தான் செய்தது தவறு என்று புரிந்து கொண்டு தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.


elizabeth-posed


மிகவும் அழகான பெண்ணான எலிசபெத் டெய்லர், தனது நெருங்கிய நண்பர்களின் மரணத்திற்கு பின் போதைப்பழக்கம், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, ரிச்சாட்டு பர்டன் என்பவருடன் நெருங்கி பழகி வந்தார். ஒரு கட்டத்தில் ரிச்சாட்டு மற்றும் எலிசபெத் பிரிய, அந்த பிரிவைத் தாங்கிக் கொள்ளாத எலிசபெத், தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்டார். இருப்பினும் எப்படியோ அவரை காப்பாற்றிவிட்டார்கள். பின் பர்டன் மற்றும் எலிசபெத் தங்களது துணைகளை விவாகரத்து செய்துவிட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


princess-diana


இளவரசி டயானா பெரும்பசி உளநோயினால் அவஸ்தைப்பட்டதால், தற்கொலைக்கு முயற்சித்தார் என்று அவரது சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ மோர்டன் என்பவர் குறிப்பிட்டிருந்தார். அதிலும் 5 முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


judy-garland


ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஜூடி கார்லேண்ட் அதிகப்படியான வேலைப்பளுவினால் மன இறுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இவர் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் 1947 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தி பைரேட் என்னும் படப்பிடிப்பின் போது, ஜூடி தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அப்போதே அங்குள்ளோர் அவரைக் காப்பாற்றிவிட்டனர்.


britney-spears


பிரிட்னி ஸ்பியர்ஸ் கூட தற்கொலைக்கு இரண்டு முறை முயற்சித்துள்ளார். ஏனெனில் விவாகரத்து நடந்ததால், அவர் மன இறுக்கத்திற்கு ஆளாகி, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இருப்பினும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தற்போது எந்த ஒரு தவறான முடிவும் எடுக்காமல் உள்ளார்.


eminem


புகழ்பெற்ற அமெரிக்க ராப் கலைஞரான எமினெம் கூட தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். ஏனெனில் இவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இருந்தால் தான். எனவே இவர் டைலனோலை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger