சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் மகத்தானவை, ஆனாலும் மேற்கிந்திய தீவுகளின் லாராதான் சிறந்த பேட்ஸ்மேன் என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் ஜேக் காலிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜேக் காலிஸ் டெஸ்ட் போட்டிகளில் அண்மையில் ஓய்வு பெற்றார்.
கேப்டவுனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜேக் காலிஸ் கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட்டுக்கு டெண்டுல்கர் அதிகமான பங்களிப்பை செய்துள்ளார். அவரது சாதனைகள் வியக்கத்தக்கது மட்டுமின்றி நம்ப முடியாதது. அவரது சாதனைகளை எட்டுவது மிகவும் கடினம். அதே நேரத்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் லாரா. வேகப்பந்து வீரர்களில் வாசிம் அக்ரம் தான் சிறந்தவர். சுழற்பந்து வீரர்களில் வார்னே சிறந்தவர். உலக கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் நிறைவேறாமல் இருக்கும் ஆசை. இவ்வாறு ஜேக் காலிஸ் கூறினார்.
Post a Comment