Home » , , » பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்

Written By Namnilam on Tuesday, March 11, 2014 | 7:24 PM

இன்று இலங்கையில் இடம்பெற்ற போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமான வடகிழக்கு பகுதியில் பெண்களே அதிகளவில் வசிக்கின்றனர். வடபகுதியில் பெண்களும், பெண்களைக் குடும்பத்தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களும் அதிகளவில் உள்ளனர்.


ஆனால் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள அரசியல் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு மோசமானதாகவே உள்ளது. இந்நிலை மாறி பெண்களின் நிலை உயர்ச்சியடைய பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டியதுடன் பெண்கள் துணிந்து அரசியலில் ஈடுபடவேண்டுமெனவும் தெரிவித்தார்.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலி.மேற்கு (சுழிபுரம்) பிரதேசசபையால் நடாத்தப்பட்ட மகளிர் தின விழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர் சுதந்திரம் என்பது சும்மா கிடைத்து விடாது. போராடினால் மாத்திரமே அதைப்பெற்றுக் கொள்ளலாம்.


பிரஞ்சுப் புரட்சியின் போது கி.பி 1789ஆம் ஆண்டில் பெண்கள் வீதிக்கு வந்து தமது உரிமைகளை வேண்டிப் போராடினர். இன்று கொண்டாடும் மகளிர் தினம் கூட பெண்கள் சம உரிமை, வாக்குரிமை வேண்டி முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால் தான் கிடைத்தது.1911 ஆம் ஆண்டு மகளிர் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வெற்றியைத்தான் இப்பொழுது உலகம் பூராகவும் மகளிர் தினமாக கொண்டாடி வருகிறார்கள்.


அகிம்சைப் போராட்டத்திலும் சரி, எமது ஆயுதப் போராட்டத்திலும் சரி தமிழ்ப் பெண்கள் அளப்பரிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். ஆயுதப் போராட்டத்தில் பெரும் தளபதிகளாகவும், சிப்பாய்களாகவும் எமது தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாது. பல போராட்டங்களின் வெற்றிக்கு பெண்கள் அணியே காரணமாகவும் இருந்துள்ளதை நாம் மறக்க முடியாது.


ஆனால் இன்று பலவழிகளிலும் பல இன்னல்களை எமது பெண்கள் அனுபவித்து வருகின்றனர். சகோதரனை, தந்தையை, கணவனை, மகனை யுத்த்தில் பறிகொடுத்தும், தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படு இருக்கும் சூழ்நிலையிலும் எமது பெண்கள் பல் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.


யாழ்ப்பாணத்தில் மொத்தம் 224 உள்ளூராட்சி உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அதில் மொத்தம் 09 பேரே பெண்களாக இருக்கின்றனர். அதிலும் சபையின் தவிசாளர்களாக இருவரே உள்ளனர். அதில் ஒருவராக இச்சபையின் தவிசாளர் திருமதி நாகரங்சினி ஐங்கரன் அவர்கள் விளங்குகின்றார்.


யுத்ததின் மூலம் நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன்று எமது பகுதியில் பெண்களே அதிகளவில் வசிப்பதுடன், வாக்காளர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் பெண்களின் அரசியல் பிரவேசமானது மிகக்குறைந்தளவிலேயே காணப்படுகிறது. இந்நிலையை மாற்றி பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட்டு பெண்களினதும், சமூகத்தினதும் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டுமெனத் தெரிவித்தார் .


வலி.மேற்கு (சுழிபுரம்) பிரதேசசபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளரும், யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திருமதி இமல்டா சுகுமார், சட்டத்தரணி திருமதி .உமா தங்கவேல், சட்டத்தரணி செல்வி. காயத்ரி குமாரதேவன் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger