Home » » இன்டர்நெட்டில் ஆபாச படம், கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

இன்டர்நெட்டில் ஆபாச படம், கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

Written By Namnilam on Wednesday, April 23, 2014 | 11:30 AM

சேலம் டவுன் அருணாச்சல ஆசாரித்தெருவை சேர்ந்தவர் பத்மா. இவர் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது குழந்தை அவரது சேலையில் வாந்தி எடுத்தது.


இதனால் பத்மா சேலையை அவிழ்த்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். அவர் சேலை மாற்றுவதை யாரோ செல்போனில் படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். இதை அறிந்த பத்மா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார்.


இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து சேலம் குகை பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 20), செவ்வாய்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்(வயது 20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


கைதான மனோகரன் சேலம் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சந்தோஷ் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார்.


இவர்கள் வேண்டும் என்றே இன்டர்நெட்டில் படத்தை வெளியிட்டனரா? அல்லது யாரும் தெரிவித்து படத்தை வெளியிட்டனரா? என்றும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கைதான 2 பேரும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger