Home » » கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் இரு மகள்மாரும் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாயும் இரு மகள்மாரும் கைது

Written By Namnilam on Tuesday, April 22, 2014 | 4:26 PM

சென்னையில் இருந்து நேற்று இரவு இலங்கைக்கு வந்த தாயும் இரண்டு மகள்மாரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை இலங்கைக்கு கொண்டு வந்த நிலையிலே இவர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 83 லட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இவர்களிடம் இருந்து 60,000 அமெரிக்க டொலர், 1,405 சவுதி ரியால், 1,200 யூரோ மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger