Home » » மேக்ஸ்வெல் அதிரடி, பஞ்சாப் அணிக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றி

மேக்ஸ்வெல் அதிரடி, பஞ்சாப் அணிக்கு தொடர்ந்து மூன்றாவது வெற்றி

Written By Namnilam on Wednesday, April 23, 2014 | 7:37 AM

ஐதராபாத்- பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 9-வது லீக் போட்டி சார்ஜாவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் தவான் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் இசாந்த சர்மாவிற்கு பதிலாக இர்பான் பதான் சேர்க்கப்பட்டார். அதேபோல் பஞ்சாப் அணியில் ரிஷி தவான் மற்றும் சந்தீப் சர்மா இடம்பெற்றனர்.


பஞ்சாப் அணியைச் சேர்ந்த புஜாரா- சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது ஓவரை இர்பான் பதான் வீசினார். இந்த ஓவரில் சேவாக் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். புவனேஸ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் சேவாக் ஒரு சிக்ஸர் அடித்தார். ஸ்டெய்ன் வீசிய 5-வது ஓவரில் புஜாரா 3 பவுண்டரி விளாசி அசத்தினார்.


மிஸ்ரா வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸ் அடித்த சேவாக் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன் எடுத்தார். அடுத்து கடந்த இரண்டு போட்டிகளிலும் அசத்திய மேக்ஸ்வெல் களம் இறங்கினார்.


கம்ரான் சர்மா வீசிய 10 ஓவரின் 3 பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து மேக்ஸ்வெல் தனது அதிரடியை தொடங்கினார். அடுத்த பந்தில் அல்வா மாதிரி கையில் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். 11-வது ஓவரின் கடைசி பந்தில் புஜாரா 32 பந்தில் 6 பவுண்டரியுடன் 35 ரன் எடுத்து சமி பந்தில் வெளியேறினார்.


பதான் வீசிய 12வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை மிஸ்ரா வீசினார். இந்த ஓவரில் 4 இமாலய சிக்சர் விளாசினார் மேக்ஸ்வெல். அதோடு ஐதராபாத் பந்து வீச்சாளரின் பந்துகளை விட்டு வைக்கவில்லை.


சர்மா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி விளாசினார். இதற்கிடையே 10 ரன் எடுத்த மில்லர் அவுட் ஆனார். மறுமுனையில் யார் அவுட்டானாலும் நமக்கென்ன என மேக்ஸ்வேல் தன் அதிரடியை நிறுத்தவி்ல்லை.


18-வது ஓவரில் 2 சிக்சர் அடித்த அவர் அடுத்த பந்தில் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 43 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்ஸருடன் 95 ரன் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு ரன் அடிக்க டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் குவித்தது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.


பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களம் இறங்கினர். தொடக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜான்சன் பந்தில் தவான் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வார்னர் 9 ரன்னில் பாலாஜி பந்தில் ஆட்டம் இழந்தார்.


அதன்பின் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால் ஐதராபாத் 121 ரன்னில் சுருண்டது. இதனால் பஞ்சாப் அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் பாலாஜி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் தொடர்ச்சியாக 3 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger