ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அடுத்த வாரம் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்திக்கவுள்ளனர். கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதன் போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கட்சிகளின் கொள்கை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சி தற்போது பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்மைப்பு மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எதிர்க்கட்சி தொடர்பிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment