பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன. நாடாளுமன்ற கடனுதவி சங்கத்தின் நிதியை பாரியளவில் மோசடி செய்த பிரதான சந்தேக நபரின் சொத்துக்கள் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நாடாளுமன்ற கடனுதவி சங்கத்தின் பத்து கோடி ரூபா நிதி கையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நலன்புரிச் சங்கத்தின் பொருளாளரே இவ்வாறு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நபராவார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான வீடு மற்றும் காணிகள் அரசுடமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment