ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தின் பெயர் லிங்கா என்பது நமக்கு தெரியும். இப்பொழுது நான் சொல்ல வரும் புது செய்தி என்னவென்றால் படத்திற்கு லிங்கா பட பெயர் எப்படி வந்தது என்று தான்.
லிங்கா என்ற இந்த படத்தின் பெயரை ரஜினி தேர்ந்தெடுத்து உடனே இந்த தலைப்பை பதிவு செய்ய சொன்னார். சரி பதிவு செய்ய சொல்லிட்டார் அப்புறம் என்ன என்று கேட்கிறீர்களா, சொல்கிறேன்.
தலைப்பை பதிவு செய்ய போனவர் ரஜினிக்கு ஒரு ஷாக் நியூஸ் கூறினாராம். சார் அந்த தலைப்பை வேறொரு கம்பெனி பதிவு செய்திருக்கிறார்கள் என்று கூற, ரஜினி அது யார் என விசாரியுங்கள் என்று கூறினாராம்.
அங்க தான் கதையில வந்தது ஒரு டுவிஸ்ட். இந்த தலைப்பை பதிவு செய்திருப்பவர் ரஜினியின் மருமகன் தனுஷ்.
தனுஷின் மகன் பெயர்தான் லிங்காவாம், தன் மகன் பெயரில் தானே ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தலைப்பை பதிவு செய்திருந்தாராம் தனுஷ்.
ஆனால் ரஜினி சார் இந்த தலைப்பை வைக்க சொல்லியிருக்கிறார் என்ற செய்தி தனுஷுக்கு போக, இந்க தலைப்பில் அவர் நடிக்கிறார்னா அதைவிட பெருமை இந்த தலைப்புக்கு வேறென்ன இருக்க முடியும்னு, உடனே தலைப்பை மாற்றிவிட்டாராம் தனுஷ்.
இப்படி தாங்க லிங்கா தலைப்பு ரஜினிக்கு கைம்மாறி வந்ததாம்
Post a Comment