Home » » காஜலின் சறுக்கல் ஆரம்பமா ?

காஜலின் சறுக்கல் ஆரம்பமா ?

Written By Namnilam on Thursday, April 24, 2014 | 5:58 AM

தெலுங்கில் அறிமுகமாகி தமிழ்ப்பட உலகில் ஆழமாகக் காலூன்றிய காஜல், டோலிவூட் மற்றும் கோலிவூட்டின் ஹாட்டான குளோப்ஜாமூன். மும்பையில் பிறந்து வளர்ந்த இந்த தெத்துப்பல் சிரிப்பழகி, முதலில் நடித்த தமிழ்ப்படம் ‘பொம்மலாட்டம்’.


ஆனால் அந்தப் படம் வெளியாகும் முன்பே 'பழனி', 'சரோஜா', ‘மோதி விளையாடு’ என மூன்று படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகி, ஒட்டு மொத்தமாக தோல்வியைத் தழுவின. ஒருபடம் மண்ணைக் கவ்வினாலே திண்ணையைக் காலி பண்ணு என்று சொல்லும் கோலிவூட்டில், காஜல் இன்று முன்னணி கதாநாயகர்கள் விரும்பும் மோஸ்ட் வாண்டெட் நாயகி ஆகியிருப்பதற்குக் காரணம்... துப்பாக்கி


பட இசை வெயியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறிப்பிட்டதைப் போல, அவருக்கு மட்டும்மல்ல.. மொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ‘ஹாட் அண்ட் ஸ்பைசி கேர்ள்’ என்ற எண்ணத்தை உருவாக்கி விட்ட, அவரது துள்ளும் இளமையும், கண்களைக் கிள்ளும் க்ளாமர் உடல் கட்டும்தான். கவர்ச்சி மட்டுமே என் களமில்லை என்பதை சொல்லும் விதமாக. கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தில், அடுத்தட்டு மிடில் கிளாஸ் பையனை காதலித்துவிட்டு, 'அப்பர் மிடில் கிளாஸ்' அப்பாவிடம் காதலுக்காக குழையும் பெண்ணாக கவனம் ஈர்த்தார்.


தற்போது நகைச்சுவை முன்னிலைப்படும் கதைகளில் நடிக்க விரும்பும் கஜாலுக்கு தெலுங்கிலும் வலுவான இடமிருக்கிறது. காரணம் காஜலை அங்கே ‘கமர்ஷியல் கதாநாயகியாக’ அங்கீகரித்து விட்டார்கள். தமிழ், தெலுங்குக்கு மத்தியில், தன்னை அறிமுகப்படுத்திய பாலிவூட்டிலும் காஜலுக்கான வாய்ப்புகள் கையில் வந்து விழவே செய்கின்றன. ரசிகர்கள் நிராகரிக்க விரும்பாத இளமையின் அடையாளமாக இருக்கும் இவரை, அழுத்தமான கதாபாத்திரங்களில் அடுத்து வரும் ஆண்டுகளில் பார்க்க முடியுமா என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.


காரணம் 'உத்தம வில்லன்' படத்தில் கமல் ஜோடியாக நடிக்க அழைக்கப்பட்ட நிலையில், பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார் காஜல். கமலுடன் நடித்தால் பிறகு ஜூனியர் நடிகர்களுடன் நடிக்க முடியாது என்று முடிவுசெய்துவிட்டார் காஜல். இதனால் அவருக்கான கதாபாத்திரத்தில் தற்போது அண்ட்ரியா நடித்து வருகிறார். இதுவே கூட தமிழில் காஜலின் பெரும் சறுக்கலுக்கு முதல்படியாக இருக்கலாம்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger