Home » , , , » ஏழு நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்

ஏழு நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்

Written By Namnilam on Friday, April 18, 2014 | 2:58 PM

நண்பர்களே , உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்கு ஆரோக்கியமான வழியை பின்பற்ற ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஏழே நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய மிகவும் பிரபலமான ஒரு டயட் முறையை உங்களுக்காக கொடுத்துள்ளது. மேலும் இந்த முறையை படிக்கும் போது நீங்கள் இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, நிச்சயம் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தான் விளையும் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் பொய். ஏனெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படி ஒரு வாரம் பின்பற்றி வந்தால், நிச்சயம் 7 நாட்களுக்கு பின்னர் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பதை காண்பீர்கள்.


அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா ? இதோ 10 வழிகள் :

குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை தவறாமல் நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். இதனால் உங்களை 'குண்டுமணி' என்று கிண்டல் செய்தவர்கள், ஒரு வாரம் கழித்து கிண்டல் செய்யாத வகையில் மாற்றத்தைக் காணலாம்.



டே 1: சூப் டயட் முதல் நாளில் சூப் டயட்டை பின்பற்ற வேண்டும். நாள் முழுவதும் உங்களுக்கு பிடித்த எந்த சூப்பை வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் அசைவ சூப் குடிக்கும் போது மட்டன் சூப் மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக சூப்பில் உப்பை அதிகம் சேர்க்காமல், முடிந்தால் உப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.

டே 2: முட்டைக்கோஸ் டயட் உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே இரண்டாம் நாளில் முட்டைக்கோஸை பலவாறு செய்து சாப்பிட வேண்டும். இதனால் முட்டைக்கோஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றிவிடும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.


cabbagediet


டே 3: கிரேப் ஃபுரூட் டயட் கிரேப் ஃபுரூட்டில் கொழுப்புக்களை கரைக்கும் நொதிகள் அதிகம் இருப்பதால், மூன்றாம் நாளில் கிரேப் ஃபுரூட் டயட்டை பின்பற்றுங்கள். இதனை அப்படியே அல்லது ஜூஸ் என்று எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.


டே 4: ஜூஸ் டயட் ஆம், வெறும் பழங்களை சாப்பிட்டாலும் உடல் எடையில் மாற்றம் தெரியும். அதற்கு நான்காம் நாளில் விருப்பமான பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.


டே 5: காய்கறி டயட் காய்கறிகளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. எனவே ஐந்தாம் நாளில் பசலைக்கீரை, கேரட் மற்றும் உருளைக்கிழங்கு என்று வெறும் காய்கறிகளை விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள். குறிப்பாக அப்படி சமைத்து சாப்பிடும் போது உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். மேலும் வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ தான் சாப்பிட வேண்டும்.


grapefruit


டே 6: தண்ணீர் டயட் ஆறாம் நாளில் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். எனவே ஆறாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன், சுடுநீரை குறைந்தது 6-8 லிட்டராவது குடித்து விட வேண்டும். இதனால் சுடுநீரானது கொழுப்புக்களை கரைத்துவிடும்.


டே 7: விருந்துணவு ஏழாம் நாளில் நல்ல விருந்துணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக அப்படி விருப்பமான உணவுகளை உட்கொள்ளும் போது, அளவுக்கு அதிகமாக வயிறு நிறைந்து வழியும் அளவு சாப்பிட வேண்டாம். மேலும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.


குறிப்பு மேற்கூறியவாறு ஒரு வாரம் செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் காணலாம். ஆனால் எந்த ஒரு செயலை செய்யும் போது, நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், அந்த செயல் வெற்றி பெறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமட்டுமின்றி பலருக்கு இந்த டயட் ஒர்க் அவுட் ஆகாது, ஏனெனில் இதை மட்டும் எப்படி சாப்பிட்டால் எப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கக்கூடியவை. எனவே நம்பி மேற்கொள்ளலாம்.


English :



If you are ready to lose those extra kilos, you can opt for something quick and healthy like a crash diet. Nam Nilam has a popular seven-day crash diet plan for weight loss. This seven-day crash diet can get you the curves you are longing for. Yes, in seven days or one week, you will be a new and improved person. There are some who do not believe in crash diet as they consider it to be unhealthy, but it is not true. There are some crash diets for weight loss which are filled with nutrients and other sources of vitamins which will give you the energy and help you lose weight quickly. This seven-day crash diet plan for weight loss has a list of must haves. If you consume what is directed in the list, you will be able to lose those pounds quickly.


 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger