Home » » சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும், ஐ.நா நம்பிக்கை

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும், ஐ.நா நம்பிக்கை

Written By Namnilam on Thursday, May 22, 2014 | 2:07 PM

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற யோசனைக்கு இணங்க முடியாது என்ற இலங்கை அரசாங்கம், இதுவரையிலும் உத்தியோகபூர்வதாக அறிவிக்கவில்லை எனினும் அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.


இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் செய்தி தொடர்பாளர், தெரிவித்துள்ளதாவது,


வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் உட்பட அரசாங்க அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்புக்களை தொடர்ந்து நிராகரித்தாலும், விசாரணையில் பங்கேற்பதில்லை என்ற முடிவை இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.


ஆணையாளரின் செயற்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் சாத்தியம் பற்றி நம்பிக்கையோடு இருப்பதாக அவர் கூறினார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக உண்மையை அறிவது அரசாங்கத்தின் நலனுக்கு உகந்தது. எனவே அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்குமென நாம் நம்புகின்றோம்.


தமது வேலை பற்றி அரசாங்கத்திற்கு முழுமையான விளக்;கம் அளிக்கவும் தன் செயற்பாட்டுடன் ஒத்துழைக்க வாய்ப்பு வழங்கவும் அலுவலகம் விரும்புகின்றது என பேச்சாளர் கூறியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் நியாயாதிக்கத்துக்கு இலங்கை உட்படாதென கூறி, ஜனாதிபதியும் அதிகாரிகளும் விசாரணையை நிராகரித்ததுடன் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து விடுகின்றனர்.


ஐக்கிய நாடுகள் சபையில் 25ஆவது அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விசாரணை ஆணையாளருக்கு நியமிக்கும் பணி இம்மாத முடிவுக்கு முன்னர் பூரணமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்துவதற்காக ஓர் அணியை தயாராக்கி வருகின்றது. இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அப்பேச்சாளர் கூறினார் இதை விசாரணைக்காக உத்தேச செலவு 1.4 மில்லியன் அமெரிக்க டொலராக மதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger