Home » » மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்

மேஜர் முகுந்த் வீட்டில் நடிகர் விஜய்

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 11:37 AM

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வீட்டுக்குச் சென்ற நடிகர் விஜய் அவரது குடும்பத்தாருடன் சிறிது நேரம் செலவிட்டு அவர்களது துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த மாதம் 25ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முகுந்த் வீட்டுக்குச் சென்ற விஜய், அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் முகுந்தின் மகளுடன் இரண்டு மணிநேரம் செலவிட்டார். தந்தை இழந்த சோகத்தை அறியாத முகுந்தின் 4 வயது மகள் முகத்தில் சிரிப்பை வரவழைத்த விஜய், அவளுடன் விளையாடினார். விஜய் மடியில் முகுந்தின் மகள் அமர்ந்து புன்னகை சிந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger