இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கை தமிழர்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டார். இவ்வாறு தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பொன் இராதாகிருஷ்ணன். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் சிலர் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இலங்கைத் தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்ததுபோன்று பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி துரோகம் இழைக்காது.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பிலும் தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும் சாதகமான நிலைமைகளைக் கையாளும். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, மோடி அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அது தவறான கருத்து. நாளை மறுதினம் மோடி பதவியேற்கும் நிகழ்வை தமிழக முதல்வர் புறக்கணிக்கக்கூடாது. என்றும் அவர் தெரிவித்துள்ளர்.
Post a Comment