Home » » சென்னையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு பிரணாப்முகர்ஜி கண்டனம்

சென்னையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கு பிரணாப்முகர்ஜி கண்டனம்

Written By Namnilam on Saturday, May 3, 2014 | 12:45 PM


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது;

கோழைகள் நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் செய்து கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger