பெங்களூர் அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன் தேவைப்பட்டது. உலகின் தலைசிறந்த வேகப் பந்து வீரரான ஸ்டெய்ன் வீசிய 19–வது ஓவரில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி திருப்புமுனை ஏற்படுத்தினார். அந்த ஓவரில் 24 ரன் எடுக்கப்பட்டது.
டிவில்லியர்ஸ் முதல் பந்தில் சிக்சரும், 2–வது பந்தில் சிக்சரும் அடித்தார். 3–வது பந்தில் லெக்பை மூலம் 1 ரன் கிடைத்தது. 4–வது பந்தில் ஸ்டார்க் ஒரு ரன் எடுத்தார். 5–வது பந்தில் பவுண்டரியும், 6–வது பந்தில் சிக்சரும் அடித்து டிவில்லியர்ஸ் முத்திரை பதித்தார். ஸ்டெய்ன் 2012–ம் ஆண்டு 19–வது ஓவரில் இதே மாதிரி 24 ரன் கொடுத்தார். அதே நிலைமை அவருக்கு மீண்டும் தொடர்ந்தது.
Post a Comment