Home » , » மங்காத்தா 2வில் அஜீத்துடன் இணைந்து நடிப்பாரா விஜய்?

மங்காத்தா 2வில் அஜீத்துடன் இணைந்து நடிப்பாரா விஜய்?

Written By Namnilam on Friday, June 20, 2014 | 8:31 AM


அஜீத்தின் மாறுபட்ட நடிப்பில் அவரது ஐம்பதாவது படதாக வந்த திரைப்படம் “மங்காத்தா“. பல முண்ணனி நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முண்ணனி நடிகரான அர்ஜுன் அப்படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் சிறப்பாக பேசப்பட்டது. இப்படம் பெரும்வெற்றியடைந்ததை அடுத்து இபப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. 

ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஆர்வமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்“ நான் மிகப்பெரும் பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க விரும்புகிறேன். அப்படத்தின் முண்ணனி கதாபாத்திரங்களில் அஜீத் மற்றும் விஜய் நடித்தால் மிகச்சிறப்பாக இருக்கும். இதற்கு ஒரே வழி மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தான்” என்று தெரிவித்தள்ளார். இது போன்று மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பல்வேறு தகவல்கள் வெனிவந்த வண்ணம் உள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger