Home » , » உடல் ஆரோக்கியத்தை காக்கும் 30 நிமிட ஓட்டம்

உடல் ஆரோக்கியத்தை காக்கும் 30 நிமிட ஓட்டம்

Written By Namnilam on Thursday, June 12, 2014 | 6:12 PM

சைக்கிள் ஓட்டுவது, சாலைகளில் ரோலர் ஸ்கேட்டிங் செல்லுதல் என்று திறந்த வெளியில் செய்யும் விளையாட்டுக்களில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும், காலையில் திறந்த வெளியில் ஓடும் அல்லது துரித நடையில் செல்லும் அனைவருக்கும் கிடைக்கும்.

தினமும் அதிகாலையில் குளிர்ந்த காற்று வீசும் போது முப்பதே முப்பது நிமிடங்கள் மட்டும் ஓடுங்கள். இலக்கு நிர்ணயிக்காமல் இன்று அந்தப்பக்கம், நாளை இந்தப் பக்கம் என்று ஓடுங்கள். நகரத்தின் சாயல்கள் இல்லாத இடமாக இருந்தால் மிக நல்லது.

உடற்பயிற்சி நிலையங்களிலும், வீட்டிலும் உடற்பயிற்சி செய்வதை விட இது நல்லது. சிறு பிராயணப் பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்து சென்றால், தொடைகளும் நுரையீரல்களும் நன்கு பலம் பெறும். இதன் மூலம் 228 கலோரி செலவாகும்.

உள்ளுக்குள் நம்பிக்கையையும் வெளியில் அழகான துடிப்பான தோற்றத்தையும் காலை நேர ஓட்டம் தருவதால், அதற்காக தினமும் 30 நிமிடங்கள் ஒதுக்குங்கள். இதனால் உடல் நலம் பாதுகாப்பாக இருக்கும் 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger