Home » , » உருளைக்கிழங்கு கோதுமை தோசை

உருளைக்கிழங்கு கோதுமை தோசை

Written By Namnilam on Thursday, June 12, 2014 | 7:43 PM

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
கோதுமை மாவு - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• முதலில் வேக வைத்து தோரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.

• பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

• பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

•  தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், உருளைக்கிழங்கு கோதுமை தோசை ரெடி!!! 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger