Home » , , , , , , , , , » கற்றல், கற்பித்தலுக்கு இடையூறுகளை விளைவிக்க வேண்டாம்: படையினரிடம் வடக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்

கற்றல், கற்பித்தலுக்கு இடையூறுகளை விளைவிக்க வேண்டாம்: படையினரிடம் வடக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்

Written By Namnilam on Thursday, February 27, 2014 | 7:46 PM

கிளிநொச்சி மாவட்ட அக்கராயன் பிரதேச பாடசாலைகளின் கல்வி வள ஆய்வு அக்கராயன் மகாவித்தியாலத்தில் நடைபெற்றுள்ளது.kili_akkarayan_004 kili_akkarayan_005 kili_akkarayan_006 kili_akkarayan_009 kili_akkarayan_011



இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மாகாணசபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, பிரதேசசபை உறுப்பினர் சு.தயாபரன், வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் அமிர்தலிங்கம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு சிறப்புரையாற்றிய கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,

பாடசாலைகள் பலத்த வளப்பற்றாக் குறைகளோடு இயங்குகிறன. ஒரு சில பாடசாலைகள் வெளிநாட்டு அரசுகளின் உதவியோடு கட்டடங்களைக்கட்டி இருக்கிறது.சில பாடசாலைகளில் ஆசிரிய, மற்றும் பௌதீக வளங்களைத் திட்டம் இடாத வகையில் அரசியல் நோக்கங்களுக்காக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இன்று அந்தப் பாடசாலைகளிலே ஆசிரியர் பற்றாக்குறை பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

போக்குவரத்துப் பிரச்சினை, ஆசிரிய விடுதிகள் இன்மை, என்பன மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக கணித, விஞ்ஞான பிரிவுகளில் ஆசிரிய வளம் உயர்தரத்தில் மாத்திரமன்றி இடைநிலை வகுப்புக்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கிராமப்புறப் பாடசாலைகளில் இருக்கின்ற நெருக்கடிகளினால் பல பெற்றார்கள் தமது பிள்ளைகளுடன் நகரப்பள்ளிகளை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார்கள். இதை விட இன்று சில கிராமப்புறப் பள்ளிகளிலே உதவிகளைப் புரிகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளுக்குள் இராணுவத்தினர் வருகிறார்கள்.இது அச்சம் தருவதாக இருக்கிறது. சில பள்ளி அதிபர்கள் அல்லது ஒரு சில பெற்றோர்கள் அவர்களை அழைப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைக்கிறது. யாரும் கற்றல் கற்பித்தலுக்கான சூழலை குழப்ப முனையக்கூடாது.

முன்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய நிர்வாக ஒழுங்குகள் குறித்து சிவில் பாதுகாப்பு படையினருடன் நான் பேசுவதற்கு இருக்கிறேன். அவர்கள் அரசியல் அடையாளங்களோடு கற்பிக்க வர முடியாது. இவற்றை எல்லாம் நாம் படிப்படியாக ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கிறது.

தற்போது எம்முன்னே இருக்கின்ற பாரிய பிரச்சினை ஆசிரியர் பற்றாக்குறைதான் இதனை உடனடியாகத் தீர்ப்பதற்கு மாகாணசபையில் வழிகளைத் தேட முடியவில்லை. எனவே தற்போது 5 ஆசிரியர்களுக்கு சிறீதரன் எம் பி ஊடாக சில புலம்பெயர்ந்தவர்கள் உதவுகிறார்கள்.எனவே கிளிநொச்சி மாவட்டத்தினுடைய கல்வி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னும் சில புலம்பெயர்ந்தவர்கள் உதவினால் அது இன்றைய காலத்தின் உதவியாக அமையும் மாவட்டப்பள்ளிகளில் மூவாயிரம் பள்ளிப் பிள்ளைகளுக்கு கதிரைகளும் மேசைகளும் இல்லை.

சில பாடசாலைகளில் மலசலகூடங்களும் கிடையாது தொழில்நுட்பக் கல்வியைக் கற்பிப்பதற்கு கணினிகளும் மின்பிறப்பாக்கிகளும் இல்லை. ஏன் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு காலணிகள் கூடக் கிடையாது.புத்தகப்பைகள் கிடையாது, இவற்றை எல்லாம் தீர்க்க முடிகின்ற போதுதான் கிராமப் புறக்கல்வியை அபிவிருத்தி செய்ய முடியும். எனவே இது தொடர்பில் புலம்பெயர் சமூகம்

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger