Home » , , , , , , , » இரணை இலுப்பைக்குளத்து தமிழ் – முஸ்லிம் மக்களே அமைதி காருங்கள் -வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்

இரணை இலுப்பைக்குளத்து தமிழ் – முஸ்லிம் மக்களே அமைதி காருங்கள் -வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்

Written By Namnilam on Monday, February 24, 2014 | 2:22 PM

கடந்த வாரம் இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள எனது கட்டவுட் மீது கறுப்பு பெயிண்ட் பூசியது மட்டுமல்லாது, அதனை மேற்கொண்டது இஸ்லாமிய நபர்கள்தான் என்பதனை தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக” மீண்டும் ரிசாட் வருவான் அச்சமில்லை எதிர்பாருங்கள்” என்று எழுதப்பட்டுள்ள துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளது.


deneeswaran


இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், ஏனைய பிரதேசங்ளை விட மிகவும் கஷ்டப் பிரதேசங்களாக இருப்பவைகளில் இரணை இலுப்பைக்குளம், கல்மடு, காக்கயங்குளம், பூசாரி நகர், மண் கிண்டி, விளாத்திக்குளம், பரசங்குளம், வலயன்கட்டு போன்ற கிராமங்களாகும்.


இதனைக் கருத்திற் கொண்டே இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாடசாலையினை தரம் 9ல் இருந்து சாதாரண தரம் (O/L) வரை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதும், நீண்டகாலமாக வைத்தியர் இல்லாது காணப்பட்ட வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், அதன் விளைவாக தற்போது அங்கு வைத்தியர் சேவையில் இருப்பதையும், மேலும் இரணை இலுப்பைக்குளத்தில் இருக்கின்ற விளையாட்டு மைதானத்தை புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் எனது அப்பகுதிமக்கள் நன்கு அறிவார்கள்.


மேற்போன்ற நடவடிக்கைகளால் அப்பகுதி மக்கள் அதீத அளவு என்னை நேசிப்பதையும் நான் நன்கு அறிவேன். இந்நிலையில், மேற்படி சமூக விரோதச் செயலினூடாக இரு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையினை தோற்றுவிக்கும் அளவிற்கு தீய செயலில் ஈடுபட்ட மற்றும் ஈடுபடுகின்ற காடையர்களை பொதுமக்கள் இனங்கண்டு புத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் பொதுமக்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், மேற்படி செயலில் ஈடுபட்டவர்கள் அமைச்சர் ரிசாட் பதயுதீனின் ஆதரவாளர்களாக இருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றும், சம்பவ தினத்திற்கு முந்தைய நாள், எமது அரசியல்வாதிகள் ஒரு சிலர் அங்கு சென்று வந்துள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.


எனவே, மேற்படி செயலானது அரசியல் இலாபம் கருதியும், எதிர்கால பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தும் சுயலாபம் தேடும் நோக்கில் மேற்கொள்ளப்படுவது போன்று தென்படுகின்றது. இவ்வாறு சந்தேகிப்பதற்கான சில ஆதாரப் பூர்வமான சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவற்றின் உண்மைத் தன்மையினை சரிவர ஆராய்ந்து, குறித்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எனவே பொதுமக்களை தயவுசெய்து அமைதி காக்குமாறுஅமைச்சர் அன்பாக கேட்டு நிற்கின்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger