Home » , , , , , » யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் உல்லாச இரட்டை படகு சேவை வெள்ளோட்டம்

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் உல்லாச இரட்டை படகு சேவை வெள்ளோட்டம்

Written By Namnilam on Sunday, February 23, 2014 | 1:20 PM

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் உல்லாச இரட்டை படகு ஒன்று நேற்றைய தினம் வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்பகுதி உல்லாச வசதிக்கென புலம்பெயர்ந்த அப்பகுதி வாசி ஒருவரின் முயற்சியால் காரைநகர் படகு கட்டுனார்களால் வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.


v.v.t 1


ஜந்து குதிரை வலுவுடைய வெளி இணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இந்த படகில் சுமார் 15 பேர் வரை  பயணம் செய்து கொள்ள முடியும். எனத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த படகானது படகுகள் கரையை வந்தடைந்து செல்லக்கூடிய வான் பகுதியைக் கொண்ட வல்வை யின் கடற்கரைப் பகுதியான கொத்தியால் கடற்கரைப்பகுதிக்கும் தொண்டமனாறு செல்வ சந்நிதி ஆலய வருட மகோற்சவத்தின்  போது தொண்டமனாறு நீரேரிப் பகுதியிலும் இயக்கப்படவுள்ளது.


குறித்த படகின் முலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி வல்வை விளையாட்டுக் கழகத்திற்கும், ஊரணி வைத்தியசாலை அபிவிருத்தி சபைக்கும், யோகா நாயகி கல்வி நிலையத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger