Home » , , , , » அடிப்படை வசதிளை வழங்ககோரி பெரியகட்டு மக்கள் போராட்டம் (படங்கள்)

அடிப்படை வசதிளை வழங்ககோரி பெரியகட்டு மக்கள் போராட்டம் (படங்கள்)

Written By Namnilam on Sunday, February 23, 2014 | 3:39 AM

மீள்குடியேறி நீண்டகாலமாகியும் வீட்டுத்திட்டம் தரப்படாமையினால் வவுனியா பெரியகட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (22.2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1


 


வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள பெரியகட்டு கிராமத்தில்லேயே மக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.unnamed (1) unnamed (2) unnamed


1990 ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெயர்ந்த இம் மக்கள் 2011 ஆம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 245 குடும்பங்கள் வாழ்ந்த இக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதமையினால் தற்பொது 13 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறி நிரந்தரமாக வசித்து வருகின்றனர்.


மக்கள் நீண்ட காலம் வாழாததன் காரணமாக காட்டுப்பகுதியாக மாறியுள்ள இக் கிராமம் காட்டு விலங்குகள் மற்றும் கள்வர்களின் அச்றுத்தல் காரணமாக தற்போது மக்கள் நடமாட்டம் அற்ற அழிந்து செல்லும் கிராமமாக மாறி வருகின்றது.


இந் நிலையிலேயே மீள்குடியேறியுள்ள தமக்கு இந்திய வீட்டுத்தி;ட்டத்தில் வீடுகளை தரவேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.செட்டிகுளம் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டத்தில் தமக்கு வீடுகளை வழங்கப்பட்டும் என முதலாம் கட்ட வீட்டுத்திட்டத்தில் தெரிவித்திருந்த போதிலும் தற்போது மூன்றாம் கட்டத்திலும் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குறிறம் சுமத்தியிருந்தனர்.


இதேவேளை விவசாய கிராமமான தமது கிராமத்தில் காணப்பட்ட 80 இற்கும் மேற்பட்ட கிணறுகள் யுத்த காலத்தில் மூடப்பட்டுள்ளதுடன் தமது கிராமத்தில் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருந்த காலத்தில் கிராமத்தின் எல்லைகளை மாற்றும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


இந் நிலையில் ஜனசத்தி திட்டத்தில் தாம் வங்கிகளில் சேமித்த நிதியினையும் தற்போது பெற முடியாத நிலையில் தாம் உள்ளமையினால் பல்வேறான கஸ்டங்களை எதிர்கொள்ளவதாகவும் தெரிவிக்கும் இம் மக்கள் பல கிராமங்களில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் வன விலங்குகளின் தங்குமிடமாக மாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger