Home » , , , , , , » வடமாகாண சுகாதார சேவையின் தரவுத் தளங்களை நவீனமயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது: வடமாகாண சுகாதார அமைச்சர்

வடமாகாண சுகாதார சேவையின் தரவுத் தளங்களை நவீனமயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது: வடமாகாண சுகாதார அமைச்சர்

Written By Namnilam on Tuesday, February 25, 2014 | 3:25 PM

வடமாகாண சுகாதார மேம்பாட்டுக்காக திட்டம் தயாரிப்பது தொடர்பான கூட்டம் நேற்று (24) வடமாகாண சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


download
இதன்போது வட மாகாணத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக பலராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதன்போதுள்ள சாதக பாதக நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.


இதன்போது வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதேவேளை இக்கலந்துரையாடலை நாளையும் மேற்கொண்டு சுகாதார திட்டத்தினை வரைபு வடிவில் எடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

Unicef -1_CI

இச் சந்திப்பில் மேலும் அமைச்சர் தெரிவித்துள்ளதாவது,
யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் வடமாகாணத்தின் சுகாதாரதுறையை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக மாகாணத்தின் பலமாவட்டங்களிலும் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனை நிவர்த்திசெய்ய மத்திய சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். அத்துடன் எமது மாகாணத்தின் வைத்தியசாலைகளில் தரவுகள் தற்போதும் கையேடுகளிலேயே பாதுகாக்கப்படுகின்றது.


இவ்வாறான நடைமுறையால் நேரம் விரயமாகிறது. எனவே இவற்றை நவீன முறையில் இலத்திரனியல் தொழிநுட்பமுறையை அறிமுகப்படத்தவுள்ளோம். இதற்கு வளப்பற்றாக்குறை நிலவுகிறது. எனவே ஐ.நா.சிறுவர் நிதியம் இதற்கு அமைச்சினூடாக உதவி செய்ய முன்வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.


அத்துடன் தற்போது மாகாண சுகாதார அமைச்சினால் 5 ஆண்டு உபாயத்திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் திட்ட வரைபு தயாரிக்கப்பட்டதும் அனைவரது பார்வைக்கும் அனுப்பப்படுமெனவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தொழில்சார் நிபுணர்களின் பெறுமதியான கருத்துக்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்ததாகவும் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்த ஐ.நா.சிறுவர் நிதிய பிரதிநிதி கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் மாகாண சுகாதாரதுறை மேம்பாட்டிற்கு உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது எனவும் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் ஐ.நா.சிறுவர் நிதியத்தின் சுகாதாரம்,போசாக்கு பிரிவுக்கான பிரதானி வைத்தியகலாநிதி எசதுல்லா மஜீட்  மற்றும் ஐ.நா. சிறுவர் நிதியத்தின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger