Home » , , , » கிளி/ தம்பிராசபுரம் அ.த.க பாடசாலை விளையாட்டுப்போட்டி (Photos)

கிளி/ தம்பிராசபுரம் அ.த.க பாடசாலை விளையாட்டுப்போட்டி (Photos)

Written By Namnilam on Saturday, February 22, 2014 | 5:48 PM

கிளிநொச்சி கிழக்கில் தருமபுரத்தை அண்டிய கிராமமான தம்பிராசபுரத்தில் அமைந்துள்ள கிளி தம்பிராசபுரம் அ.த.க.பாடசாலை, தன்னுடைய இல்ல மெய்வல்லுநர் நிகழ்வை சிறப்புற நடத்தியுள்ளது. பள்ளியின் அதிபர் திருமதி. இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தனும், சிறப்பு விருந்தினராக கண்டாவளை கோட்ட கல்வி அதிகாரி இராஜகுலசிங்கமும் கலந்துகொள்ள, 


5136

வங்கி முகாமையாளர் சிறீதரன், கரைச்சி பிரதேசபை உறுப்பினர் புஷ்பராஜா பாடசாலை அபிருத்தி சங்க பிரதிநிதிகள், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், கரைச்சி பிரதேச கட்சி அமைப்பாளருமான பொன்.காந்தன் உட்பட அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆலோசகர் திருமதி வசந்தா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். குறிப்பாக, இந்த பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்பு சிறப்புற இருந்ததை அவதானிக்க முடிந்தது.


கிளிநொச்சி தம்பிராசபுரம் கிராமம், இன்றைய வடக்கு மாகாணசபை கல்வி அமைச்சரின் தந்தையாரும், கிளிநொச்சி மண்ணின் வேர்களில் ஒருவரும், ஆதரவற்ற வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவருமான தம்பிராசா போதகரின் பெயரால் விலங்குகின்றது.


முன்னர் போர்க்காலத்தில் செழிப்புற்றிருந்த இந்த கிராமம், இன்று போக்குவரத்து மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை அவதானிக்கமுடிகின்றது. தம்பிராசபுரம் அ.த.க.பாடசாலையில் அரசதரப்பு பா.உறுப்பினர் ஒருவரின் வாக்குறுதியின் பேரில் கட்டிக்கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நீர்த்தாங்கி வெறுமனே ஒரு காட்சிப்பொருளாக கிடக்கின்றது. அதற்கு தண்ணீர் ஏற்றுவது எப்படி அதற்கு மின்சாரத்திற்கு எங்கே போவது போன்ற ஏக்கத்துடன் பள்ளி நிர்வாகம் காணப்படுகின்றது.


51355140


கடந்த பல வருடங்களில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு பா.உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் இந்த பாடசாலைக்கு மைதான புனரமைப்பு, வகுப்பறை புனரமைப்பு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பள்ளி சமுகத்தினர் தெரிவிக்கின்றனர்.


தற்போது பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவால் இப்பாடசாலையின் பூங்கா புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger