Home » » மாயமான விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா

Written By Namnilam on Thursday, March 13, 2014 | 4:58 PM

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியுள்ளது மலேசியா. மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு காணாமல் போனது. இதுவரையில் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறவில்லை, 239 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.


இந்நிலையில் மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது. அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார். அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார். விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.


மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger