Home » » அமெரிக்க தீர்மானம் : பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு , சீனா நழுவல்

அமெரிக்க தீர்மானம் : பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு , சீனா நழுவல்

Written By Namnilam on Saturday, March 8, 2014 | 7:45 AM

அமெரிக்க அரசால் சமர்ப்பிக்கப்பட் அறிக்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உறுப்பு நாடுகளின் கருத்துக்களை பெறுவதற்கான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை மாலை விசேட அறையொன்றில் இடம்பெற்றது. இதில் மனித உரிமை கூட்டத்தொடரில் பங்குபற்றும் அதீதமான நாடுகள் கலந்துகொண்டன.


இலங்கை தொடர்பில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கை நடைமுறையை சுட்டிநிற்கிறது என்பதுடன், அதில் கூறப்பட்டவை யாவும் சரி பிழை என்பதற்கு எதுவும் இல்லை என முதலில் சுவிட்சலாந்து தனது ஆதரவினையும் வரவேற்பினையும் வெளியிட, முறையே லண்டன், கனடா ஆகிய நாடுகளும் தனது முழுமை ஆதரவைத் தெரிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியமும் தனது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தது.


அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் கூட்ட ஆரம்பம் முதல் தனது எதிர்பினை வெளியிட்டு வந்த பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இன்றைய கலந்துரையாடலில் சீனா ஒரு வித நழுவல் நிலையை கடைப்பிடிக்க, பாகிஸ்தான் தூதரக அதிகாரி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவின் அறிக்கைக்கு வரிக்கு வரி பிழை கூறியதுடன் உரத்த குரலில் கதைத்ததையும் அவதானிக்கக் கூடியதாயிருந்தது.


ஐ.நாவின் இலங்கைக்கான குழு தனது கருத்தை வழமை போன்று அமெரிக்க அறிக்கைக்கு எதிராகக் கூறியதுடன், நாகரீகமற்ற முறையில் இடை நடுவில் எழுந்து சென்றமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பலரும் அமெரிக்க அறிக்கை தொடர்பில் கருத்துக்களையும் நிலைப்பாட்டினையும் வெளிப்படத்தினர்.


சுமார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் நீடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதுடன்,


இலங்கை மீது பல சர்வதேச நாட்டுப் பிரதிநிதிகள், விசாரணை என்கின்ற முறையில் தமது கருத்துக்களை பரிமாறியமையை அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அத்துடன் இலங்கை அரசின் யுத்த கால மற்றும் நடைமுறை நாட்களின் செயற்பாட்டில் பலர் அதிருப்தி கொண்டுள்ளமை அவர்களின் உரையாடல் மூலம் அவதானிக்கக் கூடியதாகவும் இருந்தமை இங்கு குறிப்பிடததக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger