Home » , , » பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புப் பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புப் பேரணி

Written By Namnilam on Monday, March 10, 2014 | 9:49 AM

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் பேரணியொன்று நடைபெற்றுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணி, நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டு யாழ். இந்து மகளிர் கல்லூரியைச் சென்று நிறைவடைந்தது.


இதன்போது, வடக்கு முதலமைச்சர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் ஊடாக ஜனாதிபதிக்கும் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்து மகளிர் கல்லூரியில் பெண்கள் அமைப்புக்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று பல்வேறு பிரகடனங்கள் செய்யப்பட்டு நிகழ்வு முடிவுறுத்தப்பட்டது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger