Home » , , , , , » கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் - ஜோன்நீல்

கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் - ஜோன்நீல்

Written By Namnilam on Sunday, March 2, 2014 | 2:44 PM

jonh neel_CI

இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப்பகுதி தூதுவர் ஜோன்நீல் தெரிவித்தார்.சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று  இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நலன்சார் பிரச்சினைகளுக்கு உதவிகளை வழங்கும் முகமாக பிரித்தானிய தூதரகத்தின் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.சிறைக்கைதிகளின் விடுதலைக்கு அந்த நாட்டு அரசாங்கம் தான் நடவடிக்கை எடுக்க முடியும் அதேபோன்று தான் இலங்கை அரசாங்கமும் சிறைக்கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர எம்மால் எதுவும் செய்ய முடியாது.


இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைய கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய கைதிகளின் விடுதலை தொடர்பில் எமது அரசாங்கம் எதுவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.எனினும் அவர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட நலன்சார் செயற்பாடுகளிலும் நாம் ஈடுபட்டு வருகின்றோம். அந்தவகையில் மரணமான கோபிதாஸ் சிறையில் இருக்கும் காலத்தில் அவருக்கு வேண்டிய உதவிகளை மேற்கொண்டு வந்தோம்.அத்துடன் அவரது நிலை குறித்தும் அவருடைய உறவினர்களுக்கும் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளையே எம்மால் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger