யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் பதினைந்து வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே நேற்றிரவு கோப்பாய்ப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.மகா சிவாராத்திரி தினமான கடந்த வியாழக்கிழமை திருநெல்வேலியின் பாற்பண்ணை என்ற பிரதேசத்திலுள்ள தனது வீட்டில் இருந்தவேளை, யாரும் இல்லாத சமயம் குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படடிருந்தது. இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினரைக் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment