Home » » மனித புதைகுழி விவகாரம்,சர்வதேச விசாரணை தேவை : சுரேஷ்

மனித புதைகுழி விவகாரம்,சர்வதேச விசாரணை தேவை : சுரேஷ்

Written By Namnilam on Monday, March 10, 2014 | 8:07 AM

மன்னார் மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச ரீதியிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மன்னார் பாரிய மனித புதைகுழியானது, கடந்த கால மயானம் என இலங்கை தொல்பொருள் ஆய்வு திணைக்களம் அண்மையில் ஊகம் வெளியிட்டிருந்தது. இந்த ஊகம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.


மனித புதைகுழி தொடர்பில் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுமாயின், சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் வெவ்வேறு கதைகளை கூறி வருவதாகவும், இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கற்பனைகளில் கதைகளை சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், உண்மையை கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


20ம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்திற்குரிய மயானம் ஒன்றின் மேல் எவ்வாறு பாதை அமைக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுபியுள்ளார். குறித்த பகுதியை நீண்ட காலமாக இராணுவத்தினர் கட்டுப்படுத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார். திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகாமையிலேயே இந்த மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger