Home » , » பிரான்ஸ் நாட்டு தூதுவர் - வடக்கு முதலமைச்சரை சந்திப்பு

பிரான்ஸ் நாட்டு தூதுவர் - வடக்கு முதலமைச்சரை சந்திப்பு

Written By Namnilam on Monday, March 10, 2014 | 7:37 AM

இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் கிறிஸ்டின் ராபின்சன் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இச் சந்திப்பில் பிரான்ஸ் நாட்டின் உயரதிகாரிகளும் பங்கு கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் யாழ். சிவில் சமூகப் பிரதிநிதிகளினால் பல்வேறு விடயங்கள் எடுத்து கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இன்று காலை 9 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்பின்னர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger