“நான் ஆஸ்கர் விருது வாங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை” என்று நடிகை வித்யா பாலன் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் மெல்போர்னில் வருகிற மே மாதம் 1ந் தேதி முதல் 11ந் தேதிவரை 12 நாட்கள் இந்திய திரைப்பட விழா நடக்கிறது.
இதன் தூதராக நடிகை வித்யாபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் வித்யாபாலன் இப்படி கூறினார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, எந்த விருதையும் நான் எதிர்பார்த்து நடிப்பதில்லை. அதுவும் ஆஸ்கர், பத்ம விருதுகள் மாதிரியான உயர்ந்த விருதுகளை நான் கனவிலும் நினைப்பதில்லை.
ஆனால் பத்மஸ்ரீ விருது எனக்கு கிடைத்தது. கடவுளின் கருணைக்கு நன்றி. நான் எதிர்பாராமல் பத்மஸ்ரீ விருது கிடைத்ததுபோல் நாளை ஆஸ்கரும் கிடைக்கலாம். அந்த விருதை பெறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.
எனது படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து தரும் ஆதரவை பார்த்து எனக்கு பயமாக இருக்கிறது. அடுத்த படம் இதைவிட பெட்டராக கொடுக்க வேண்டுமே. அதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டுமே என்கிற பயம்.
சமீபத்தில் வெளியான ஷாதி கே சைட் எபெக்ட் படமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கேரக்டரில் நடித்து கடைசி வரை நல்ல நடிகையாகவே வாழ விரும்புகிறேன். நடிப்பு தவிர வேறெந்த துறையிலும், குறிப்பாக அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. இவ்வாறு வித்யாபாலன் கூறியிருக்கிறார்.
Post a Comment