Home » , , , , » ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன், மமதா பானர்ஜி

ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன், மமதா பானர்ஜி

Written By Namnilam on Friday, March 7, 2014 | 12:43 PM

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு மமதா பானர்ஜி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,


லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன். ஆனால் ஒருபோதும் நரேந்திர மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன். ஜெயலலிதா பிரதமாவதில் எனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு மக்களின் நலன்தான் முக்கியம். ஜெயலலிதா பிரதமராக எனது ஆதரவைக் கேட்டால் நிச்சயம் தருவேன். நான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேனா என்ற கேள்விக்கு "என்னுடைய எல்லை எது என்பது எனக்கு தெரியும்" என்பதுதான் பதில். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரட்டும்.. மக்கள் அனைத்தையும் முடிவு செய்வார்கள். இவ்வாறு மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger