Home » , , , » வடமாகாண அவைத் தலைவர், பிரான்ஸ் தூதுவர் கலந்துரையாடல்

வடமாகாண அவைத் தலைவர், பிரான்ஸ் தூதுவர் கலந்துரையாடல்

Written By Namnilam on Monday, March 10, 2014 | 4:20 PM

யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் இன்று வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை சந்தித்து கலந்துரைடினார்.


இச்சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் ஆரம்பமானது. இச்சந்திப்புத் தொடர்பாக சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில்,


வட மாகாணத்தின் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருக்கின்றது. ஆனால், குறைக்கப்பட்டதாக அரசாங்கம் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது. இங்கு பாடசாலை நிகழ்வுகள் முதல் அனைத்து விடயங்களிலும் இராணுவத் தலையீடு இருக்கின்றது. அத்தோடு, இங்கு இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படாமல் இருக்கின்றனர்.


இந்த மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதுடன், அவர்களுடைய குடும்பங்களையும் குடியமர்த்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, இங்கிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இராணுவ வெளியேற்றத்தின் மூலமாக சிவில் நிர்வாத்தை ஏற்படுத்த முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger