Home » » அரசு மீள்குடியேற்ற நாடத்தை ஆரம்பித்துள்ளது : சஜீவன்

அரசு மீள்குடியேற்ற நாடத்தை ஆரம்பித்துள்ளது : சஜீவன்

Written By Namnilam on Monday, March 10, 2014 | 4:37 PM

ஜெனிவா கூட்டத் தொடரை ஏமாற்றுவதற்காகவே அரசாங்கம் மீள்குடியேற்ற நாடகத்தை ஆரம்பித்துள்ளதாக வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக் குழு தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்பின் தலைவரும், வலி. வடக்குப் பிரதேச சபையின் உப தவிசாளருமான சஜீவன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்பித்திருக்கின்ற நிலையில், அரசாங்கம் மீள்குடியேற்ற நாடத்தை ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது வலி. வடக்கில் மீள்குயேற்றவுள்ளதாகக் கூறி மீள்குடியேற்ற விபரங்களை திரட்டி வருகின்றனர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்களை குடியமர்த்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இந்நிலையில், மீளக்குடியமரவுள்ள மக்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதாக அரசு சர்வதேசத்திற்கு காட்டுகின்றது. குறிப்பாக, அரச அதிபரின் தகவல்களின் பிரகாரம் ஐயாயிரம் என்று கூறப்படுகினறது. ஆனால், இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது.


இந்நிலையில், தற்போது முகாம்களில் உள்ள மக்களை மட்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மக்களை வளலாய் காட்டிலும், வயல் நிலத்திலுமே கொண்டு சென்று குடியமர்த்தவுள்ளனர்.


இவ்வாறு அரசாங்கம் சதி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கு முயற்சித்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger