மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலக தலைவர் பொட்ட நௌபர் சிறையில் இருந்தவாறு ஸ்கைப் மூலம் முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொட்ட நௌபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்கைப் தொழிற்நுட்பத்தின் ஊடாக மத்திய கொழும்பு தொகுதியின் வாக்காளர்களிடம் உரையாற்றியுள்ளதுடன் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம் வாக்காளர்களை கேட்டுள்ளார்.
சிறையில் சகல வசதியும் :
மத்திய கொழும்பு கொகுதியை கேந்திர நிலையமாக கொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பொட்ட நௌபர் சிறையில் சகல வசதிகளுடன் இருந்து வருகிறார். பலரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்படடுள்ள அவர், பல சட்டவிரோத வியாபாரங்களை தொடர்புள்ளவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி போகம்பரை சிறைச்சாலை மூடப்பட உள்ளதை முன்னிட்டு அங்கு நடைபெற்ற சமய வழிப்பாடுகளின் போது, பொட்ட நௌபர் , சிறையில் சுதந்திரமான நடமாடி திரிவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள் எவருக்கும் இந்த வழிப்பாட்டில் கலந்து கொள்ள இடமளிக்கப்படவில்லை. சிறிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 20 கைதிகள் மாத்திரமே உதவிகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளில் அனுமதிக்கப்படாத நிலையில், பொட்ட நௌபர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பொட்ட நௌபருக்கு சிறையில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளமை உண்மைதான் என சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். கண்டி போகம்பரை சிறைச்சாலை மூடப்பட்டதை அடுத்து நௌபர் தற்போது பதுளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தே அவர் ஸ்கைப் மூலம் வாக்காளர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.
Post a Comment