இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளின் வாதங்கள் பலமடைகிறது. அமெரிக்காவின் அறிக்கை தொடர்பில் கனடா, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தம் அதிகரிக்கிறது என பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் நிக்சன் ஆகியோர் தெரிவித்தார்
இலங்கை தொடர்பில் ஐ.நாடுகள் சபையில் அறிக்கைகளில் பாரிய நெருக்கடி, வெல்வதில் மாற்றமில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ராஜ்குமார் மற்றும் சனல் 4 இன் ஆதாரம் தொடர்பிலும் இன்னும் பல ஆதாரங்கள் எம்மிடம் உண்டு என பிரித்தானிய தமிழர் பேரவையின் வெளிவிவகாரங்களுக்கான இணைப்பாளர் நிக்சன் ஆகியவர்கள் வழங்கிய செவ்வியில் தெரிவித்தனர்.
இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும் போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க முடியும் என்பது தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற விவாதங்களில் ஆராயப்பட்டன.
உறுப்பு நாடுகளுக்கிடையில் கடந்த வெள்ளியன்று நடந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக இந்த விவாதங்கள் நடந்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ள பாகிஸ்தான், சீனா, கியூபா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கை மீது விசாரணை நடத்துவதற்கு ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு அதிகாரங்கள் இல்லை. அதற்கான நிதிவளம் ஆணையத்திடம் இல்லை என்றும் வாதிட்டுள்ளன.
நவநீதம்பிள்ளையின் அறிக்கை இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்துகின்ற நிலையில், அந்த விதமான ஏற்பாடுகள் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வாதிட்டுள்ளன.
கால நீடிப்பு வழங்கினால் இருக்கும் ஆதாரங்களும் அழிந்து விடும் என கலந்து கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கக் கூடிய மனித உரிமை ஆர்வலர் நிமல்கா பெர்ணான்டோ மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment