சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமெரிக்காவில் பாரிய மோசடிகளை செய்து வந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரான தீபால் வன்னாகுவத்த என்பவருக்கு பிணை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்றின் உரிமையாளரான அவர், ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி பணம் ஈட்டி இருக்கிறார்.
இவ்வாறு அவர் 150 மில்லியன் டொலர்களை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு பிணை கோரி தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று அமெரிக்காவின் நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன் போது அரசாங்க தரப்பில் வாதாடிய சட்டத்தரணி, தீபால் தேர்ச்சி பெற்ற மோசடிகாரர் என்றும் அவருக்கு பிணை வழங்கினால் அவர் நாட்டில் இருந்து தப்பி செவ்வார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அவருக்கு பிணை கோரி விண்ணப்பிக்க முடியாதவாறு நீதிமன்றம் தடுப்பு காவலில் வைத்துள்ளது.
Post a Comment