கொழும்பில் இருந்து பளை வரை நேற்று முதல் குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1400 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. இந்த சொகுசு ரயில் பிற்பகல் 2.45 க்குப் புறப்பட்டு 6 மணி நேரத்தில் பளைக்கு சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது.
கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப் பட்டதையடுத்து தினமும் 3 ரயில்கள் கொழும்பில் இருந்து பளை வரை பயணிக்கிறது.
இதேவேளை நேற்று முதல் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சனிக்கிழமைகளில் மாத்தறையில் இருந்து பளை வரை ரயில் மற்றுமொரு சேவை இடம்பெறவுள்ளது. விசேட சொகுசு ரயில் தினமும் பிற்பகல் 2.45 மணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுகிறது.
இதற்கான பயணச் சீட்டுக்களை பளை வரையான சகல ரயில் நிலையங்களிலும் முன் பதிவு செய்து பெற முடியும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த ரயில் மறுநாள் காலை 6.50க்கு பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்படுகிறது.
Post a Comment