Home » » கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம், ஏப்ரல் 21, 1964

கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம், ஏப்ரல் 21, 1964

Written By Namnilam on Monday, April 21, 2014 | 7:04 AM

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழனி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.


இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லூரி தமிழாசிரியாரானார்.


இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளித்தன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்கு பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.


புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1946 சூலை 29-இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1964-ஆம் ஆண்டு இதே நாளில் இயற்கை மரணம் எய்தினார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970-இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990-இல் பொது உடைமையாக்கப்பட்டன.


மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:


* 1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
* 1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
* 1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
* 1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
* 1987 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
* 1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger