Home » » தமிழகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து அரசியல் செய்யும் அரசியற்தலைவர்கள் , தெனாலிராமன்

தமிழகத்தில் தங்கள் அடையாளத்தை மறைத்து அரசியல் செய்யும் அரசியற்தலைவர்கள் , தெனாலிராமன்

Written By Namnilam on Monday, April 21, 2014 | 6:23 AM

தெனாலிராமன் திரைப்படத்தில் ஒரு காட்சி. மன்னரின் அமைச்சரவையில் உள்ள ஒன்பது அமைச்சர்களில் ஒருவர் இறந்து விடுவார். அந்த இடத்தை நிரப்புவதற்கு மன்னர் ஒரு நேர்முகத் தேர்வை வைப்பார் . அந்தத் தேர்வில் கலந்து கொள்ள தெனாலிராமன் வருகிறார். கூடியிருக்கும் அமைச்சர்கள் தெனாலிராமனைப் பார்த்து பல கேள்விகளை கேட்கின்றனர் . அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விடுகிறார் தெனாலிராமன். இருந்தும் ஒரு அமைச்சர் தெனாலிராமனை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார் .


அமைச்சர் முன்வைக்கும் கேள்வி: " எனக்கு தெலுங்கு , தமிழ், கன்னடம், துளு , மலையாளம், மராத்தி, சம்ஸ்கிரிதம் என ஏழு மொழிகள் தெரியும். இதில் எது என்னுடைய தாய் மொழியென உன்னால் சொல்ல முடியுமா ? " என்கிறார்.
முடியும் என்கிறார் தெனாலிராமன். 'என்ன சொல்லு பார்ப்போம்' என்கிறார் அமைச்சர்.


மேலும் கீழும் பார்க்கும் தெனாலிராமன் , உமது தாய் மொழி தெலுங்கு என்கிறார். இதை கேட்டு சிரிக்கும் அமைச்சர் , 'தெனாலிராமன் சிக்கிக் கொண்டான் எனது தாய் மொழி தமிழ் தான் மன்னரும் அறிவார் , இந்த அவையும் அறியும்' என்று கூறுகிறார். ஆனால் தெனாலிராமன் உறுதியாக சொல்கிறார், இந்த அமைச்சரின் தாய் மொழி தெலுங்கு தான் என்று. அமைச்சர் அதை மறுத்து இல்லை மன்னா என் தாய் மொழி தமிழ் தான் என்று சொல்ல தெனாலிராமனோ , தெலுங்கு தான் என வாதாடுகிறார் . அமைச்சர் மீண்டும் மீண்டும் 'தமிழ்' என்கிறார் , தெனாலிராமனோ இல்லை 'தெலுங்கு' தான் அமைச்சரின் தாய் மொழி என்கிறார்.


ஒரு கட்டத்தில் அமைச்சர் என் தாய் மொழி தமிழ் தான் என்று அடித்துக் கூறுகிறேன் என சத்தியம் செய்கிறார் . உடனே தெனாலிராமன் 'இவர் தாய் மொழி தெலுங்கு தான் என்று நானும் அடித்துக் கூறுகிறேன் " என்று அமைச்சரின் முதுகில் ஓங்கி ஒரு அடி விடுகிறார் . அப்போது அமைச்சர் வலியில் 'தேவுடா' என கத்துகிறார் .


அப்போது தான் மன்னருக்கு அந்த அமைச்சர் ஒரு தெலுங்கர் என்றே தெரிகிறது. அமைச்சரும் அதை ஒப்புக் கொள்கிறார் . கோபம் வந்த மன்னர், "தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட நீ அமைச்சர் பதவிக்காக ஒரு தமிழரைப் போல இத்தனை காலம் நாடகமாடி இருக்கிறாயே" என்று அமைச்சரை கண்டபடி திட்டுகிறார்.


இந்த காட்சியில் உண்மையில் படம் சொல்லும் செய்தி என்னவெனில் தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தெலுங்கர்கள் தான் . இருந்தும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் நிலைத்திருக்க தங்களை தமிழர்களாக காட்டிக் கொண்டே வாழ்கிறார்கள். வீட்டில் ஒரு மொழியும் வெளியில் ஒரு மொழியும் பேசிக் கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். பலநூறு ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து தமிழை தாய் மொழியாக ஏற்றுக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசிக் கொண்டிருந்தால் எந்த சிக்கலும் இல்லை. தமிழை ஏற்று தமிழர் பண்பாட்டோடு இணைந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.


ஆனால் பல நூறு ஆண்டுகள் இங்கு தெலுங்கர்களாக வாழ்ந்தாலும் தங்கள் உண்மையான அடையாளத்தை மறைத்து தமிழர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தெனாலிராமன் படம் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது. இப்படம் திராவிட அரசியலைப் பற்றி மட்டும் பேசவில்லை, தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்தும் நகைச்சுவையோடு பேசி உள்ளது.


சரி.... தெனாலிராமன் அவ்வளவு உறுதியாக அந்த அமைச்சரின் தாய் மொழி தெலுங்கு தான் என்று எதை வைத்துக் கூறினார் ? அதை திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger