Home » » மீன்பிடிக்கச் சென்ற படகில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்

மீன்பிடிக்கச் சென்ற படகில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்

Written By Namnilam on Thursday, April 24, 2014 | 9:11 AM

மட்டக்களப்பு, வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகில் செவ்வாய்க் கிழமை இரவு 07.00 மணியளவில் சமையல் எரிவாயு வெடித்ததில் படகிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் படகில் சென்ற நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த சனிக்கிழம ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக நான்கு பேர் படகில் சென்றுள்ளனர் ஒரு வாரத்திற்கு தங்கி மீன் பிடிப்தற்குரிய ஆயத்தத்தில் சென்ற படகில் நேற்று இரவு 07.00 மணியளவில் சமையல் வாயுக் கசிவின் வாசம் ஏற்படவும் அவ்விடத்திற்கு என்ன நடந்துள்ளது என்று பார்க்கச் சென்ற போது சமையல் எரிவாயு வெடித்ததாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப் படகிற்கு அருகில் நின்ற படகின் உதவியுடன் நேற்று காலை படகையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் தெரிவித்தார். இச் சம்பவத்தில் படகின் மேல் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதாகவும் மொத்த சேத விபரங்கள் பெறப்படவில்லை என்றும் கோறளைப்பற்று மத்தி கடற்றொழில் பரிசோதகர் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ் மேலும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger