புத்தரின் படத்தை கையில் பச்சை குத்தியிருந்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தற்போது மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் பிரஜையான நயோமி கோல்மன் (வயது 37) தாம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள அதிகாரிகளினால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும் தன்னுடைய பொதியிலிருந்து பணமும் பொருட்களும் அகற்றப்பட்டுள்ளன என்றும் முறைப்பாடு தெரிவித்திருக்கின்றாராம்.
தாம் நாடு கடத்தப்பட்டு நாட்டை விட்டு, வெளியேறுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் கூறியிருக்கின்றார். "இந்தப் பச்சை எனது கையில் பத்து வருடங்களுக்கு மேலாக உள்ளது. ஏற்கனவே இந்தப் பச்சையுடன் இரண்டு தடவைகள் நான் இலங்கைக்குத் தாரளமாக வந்து சென்றுள்ளேன். அப்போதெல்லாம் எதுவும் நடக்கவில்லை." "நான் பௌத்தத்தை அனுஷ்டிக்கும் பௌத்தவாதி, ஆனால் இந்த பெளத்த நாடு என்னிடமிருந்து 300 பவுண்ட்ஸ்களைப் பறித்துவிடட்டது. இது நரகம்!" - என்றும் கூறியிருக்கிறார் அவர். "நான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டமையால், எனது விமானச் சீட்டில் குறிப்பிடப்பட்ட திகதியில் என்னால் இங்கிருந்து புறப்பட்டுப் போக முடியவில்லை. அதனால் அந்த விமானச்சீட்டு செல்லுபடியற்றதாகி விட்டது. இனி புதிய விமானச் சீட்டுப் பெற்றுத்தான் நான் புறப்பட முடியும். பிரிட்டிஷ் அதிகாரிகள் அதனைப் பெற்றுத் தருவார்கள் என உறுதியளித்துள்ளனர். அதற்குக் காத்திருக்கிறேன்." - என்றும் அவர் சொன்னார்.
புத்தரின் படத்தை பச்சை குத்திய பெண்ணிற்கு சிறையில் பாலியல் தொந்தரவு
Written By Namnilam on Thursday, April 24, 2014 | 9:29 AM
Labels:
இலங்கை
Post a Comment